கேரளாவில் ஏசி விற்பனை ஏற்றம்: பருவநிலை மாற்றத்தால் ஆபத்து!

கேரளாவில் ஏசி விற்பனை ஏற்றம்: பருவநிலை மாற்றத்தால் ஆபத்து!

யற்கை எழில் கொஞ்சும் கடவுளின் தேசமான கேரளாவிலும் வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் ஏசி விற்பனை 200 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. பண்டிகைகள் கொண்டாடப்படுவது என்பது கலாசாரத்தை பாதுகாப்பது, உறவுகளுடன் இணைந்து கொண்டாடுவது என்பதைத் தாண்டி, முக்கியமான வர்த்தக நடவடிக்கையும் ஆகும். பண்டிகை நாள் என்றாலே செலவு என்றே சொல்லலாம். இதனாலேயே எல்லா தொழில்களிலும் வருடத்திற்கு ஒரு முறை முக்கியமான பண்டிகை நாட்களை முன்னிட்டு உழைப்பாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது.

அதேநேரம், பண்டிகைக் காலங்களில் அனைத்து வகை நிறுவனங்களும் விற்பனையைக் கூடுதல்படுத்த சிறப்பு தள்ளுபடிகளை வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் கேரளாவில் தற்போது ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது. கேரளம் மாநிலத்தின் முக்கிய பண்டிகையாக ஓணம் கருதப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெறும் ஓணம் பண்டிகையில் பூ விற்பனை, 38 வகை உணவு படையல் என்று மாநிலமே கொண்டாட்டத்தில் காணப்படும்.

இந்த வருடம் ஓணம் பண்டிகையில் எப்போதும் இல்லாத வகையில் கேரளாவில் ஏசி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தற்போது 200 சதவீதம் வரை ஏசி கூடுதலாக விற்பனையாவதாக ஏசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கேரளாவை கடவுளின் தேசம் என்று அழைப்பதற்குக் காரணமே மாநிலம் முழுக்க பச்சை பசேல் என்ற மலைகள், மிதமான வெப்பநிலை, அவ்வப்போது பெய்யும் மழை என்று இயற்கையோடு இணைந்து இருப்பதாலேயே இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டிருக்கக்கூடிய பருவநிலை மாற்றம் கடவுளின் தேசத்தையும் விட்டு வைக்கவில்லை. இதனால் கேரள மாநிலத்தில் எப்போதும் இல்லாத வகையில் கூடுதலான வெயில் மாநிலத்தை சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் அதிகம் ஏசியை பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர்.

ஏசி விற்பனை கேரளாவில் அதிகரித்திருக்கிறது என்பது பருவநிலை மாற்றம் எந்த அளவுக்கு அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு. இது மட்டுமல்லாது, ஓணம் பண்டிகை புத்தாடைகள் விற்பனை 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை நடைபெறும் என்றும் உணவுப் பொருட்கள் விற்பனை 1500 கோடி ரூபாய் வரை நடைபெறும் என்றும் கேரளம் வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com