இந்தியாவில் பருத்தி உற்பத்தி வீழ்ச்சி!

இந்தியாவில் பருத்தி உற்பத்தி வீழ்ச்சி!

ந்தியாவின் பிரதான விளைபொருளாக உள்ள பருத்தி தற்போது பூச்சி தாக்குதலாலும், விலையேற்றத்தாலும் சரிவைச் சந்தித்து உள்ளது. பருத்தி உற்பத்தி இந்தியாவின் மிகப் பிரதான வர்த்தக நடவடிக்கையாக உள்ளது. இந்தியாவின் விவசாயத்தில் அதிகம் சாகுபடி செய்யப்படும் பயிர் வகைகளில் கடுகு, சோயா பீன்ஸ்க்கு அடுத்து மூன்றாவது இடத்தில் பருத்தி உள்ளது. பருத்தி ஜவுளி உற்பத்தியில் மிக முக்கியப் பங்காற்றுவதால் அதிகம் தேவைப்படும் பொருளாகவும் உள்ளது.

மேலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி வகைகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகை மிக அதிகம் என்பதால் இந்தியாவின் உள்நாட்டு தேவையிலும் ஜவுளி துறை முக்கியப் பங்காற்றுகிறது. அதேசமயம் ஜவுளிக்கு மூலப்பொருளாக இருக்கும் பருத்தி உற்பத்தி கடந்த சில ஆண்டுகளாக சராசரி நிலையிலேயே பயணிக்கிறது. அதிலும் நடப்பாண்டில் பருத்தி உற்பத்தி சரிவை சந்தித்துள்ளது.

2000 - 2001ம் நிதியாண்டின்படி ஒரு ஹெக்டேர் பரப்பளவில் சராசரியாக பருத்தி 278 கிலோ கிடைத்தது. 2013 - 2014ம் நிதியாண்டின் மதிப்பில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி 566 கிலோ கிடைத்தது. தற்போது 2022 - 2023ம் நிதியாண்டின் பரப்பளவில் 447 கிலோ பருத்தி மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. அதிலும் நடப்பு நிதியாண்டில் தற்போது அதைக் காட்டில் கூடுதலான வீழ்ச்சியை பருத்தி உற்பத்தி சந்தித்து இருக்கிறது.

முந்தைய 10 ஆண்டுகளில் பருத்தி உற்பத்தி மூன்று மடங்கு வளர்ச்சியை சந்தித்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் 25 சதவீதம் வீழ்ச்சியை பருத்தி உற்பத்தி கண்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது பூச்சி தாக்குதல். பல்வேறு வகையான பூச்சிக்கொல்லிகள் உருவாக்கப்பட்டு இருந்தாலும், பூச்சிகளின் தாக்குதல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. PBW என்ற பூச்சி பருத்தியை உண்ணும் வகை பூச்சியாக உள்ளது. இந்ப்த பூச்சி வகை தாக்குதலால் அதிக அளவில் பருத்தி உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

அதேசமயம் பருத்தி நூல்கள் மீது அரசு விதிக்கும் வரிகள், அதிகரித்துள்ள செலவு காரணமாக ஏற்பட்டுள்ள விலையற்றத்தின் காரணமாக பருத்தி நூல் கொள்முதல் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் அதிகம் பருத்தி சாகுபடி செய்வதைத் தவிர்க்கத் தொடங்கி இருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com