சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் தேக்கு மரம் வளர்ப்பு!

Farmers, plant teak trees on vacant lands.
Farmers, plant teak trees on vacant lands.

ம் நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளுக்கு மண் வளத்தை அதிகரிக்க, காற்று மாசுபாட்டைத் தடுக்க, நீண்ட கால அடிப்படையில் லாபம் ஈட்ட, வாய்ப்புள்ள இடங்களில் தேக்கு மரங்களை நட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

பொதுவாகவே, மனிதர்களாகிய நாம் வெளியிடும் கரியமில வாயுவை மரங்கள் எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. இதன் மூலம் காற்றை சுத்திகரிக்கும் கருவியாக மரங்கள் செயல்படுகின்றன. இத்துடன் விவசாய நிலங்களில் காற்றின் வேகத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்தும் ஒன்றாகவும் மரங்கள் இருக்கின்றன.

கூடுதலாக, மண் வளத்தைக் காத்து, சுற்றி இருக்கும் ஈரப்பதத்தை தன் வசப்படுத்திக் கொண்டு, ஆரோக்கியமான தட்பவெட்ப நிலையை சரியான முறையில் பராமரிக்க மரங்கள் உகந்ததாகும். இவற்றில் விவசாயிகளுக்கு எல்லா விதத்திலும் நன்மை புரியும் தேக்கு மரங்கள் என்றுமே சிறப்பானவை. தேக்கு மரங்கள் சுமார் 1200 மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை கொண்டவை. வருடத்துக்கு சராசரியான மழை பெய்யக்கூடிய எல்லா இடங்களிலுமே வேகமாக வளரும். நல்ல ஆழமான மண் வகை கொண்ட இடங்களில் வேகமாக வளரக்கூடியது தேக்கு மரங்கள். இதை விதைகள் மூலம் உருவாக்க நினைப்பவர்கள் மேட்டுப்பாத்தியில் இதன் விதைகளை விதைத்து ஒரு நாள் வரை ஈரமாகவும், அடுத்த 14 நாட்களுக்கு காய்ந்த நிலையிலும் இருக்குமாறு பார்த்துக்கொண்டால், மூன்றாவது வாரத்தில் விதைகள் முளைக்கத் தொடங்கும். இதை 12 மாத மரக்கன்றாகவும் வாங்கி நடவு செய்யலாம்.

நடவு செய்யும்போது தண்டு பகுதி 2.5 சென்டி மீட்டர் நீளம் விட்டு வெட்டி விட வேண்டும். பின்னர் அதன் கிழங்கு மற்றும் வேர் பகுதி 22 சென்டி மீட்டர் இருக்கும்படி நடவு செய்யலாம். ஒரு அடி ஆழம், ஒரு அடி அகலம் கொண்ட குழியில், இரண்டு மீட்டர் இடைவெளியில் நடவு செய்தால் தேக்கு மரங்கள் நன்றாக வளரும். தேக்கு மரங்களை நடுவதற்கு முன் குழியில் டிஏபி மற்றும் தொழு உரம் இடவேண்டும். தேக்கு மரங்களை நடவு செய்வதற்கு அக்டோபர், செப்டம்பர் மாதங்கள் சிறந்தவை.

தொடக்கத்தில், பத்து நாட்கள் இடைவெளியில் செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது நல்லது. விரைவாக மரம் வளர வேண்டும் என்றால் சொட்டுநீர் பாசனம் சிறந்ததாகும். மூன்று மாதம் கழித்து செடிகளைச் சுற்றிப் படர்ந்துள்ள கலைகளை எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் ஒரு ஆண்டிலேயே மரம் நன்றாக வளரும். பாசன வசதி நன்கு உள்ள இடங்களில் 20 ஆண்டுகள் வரை மரத்தை நன்றாக வளர்க்கலாம். இப்படிச் செய்தால் சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படுத்துவதுடன், சரியான நேரத்தில் இவற்றை வெட்டி நல்ல லாபம் பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com