புதினா விளைச்சல் அதிகரிப்பால் நஷ்டத்தைச் சந்திக்கும் விவசாயிகள்!

புதினா விளைச்சல் அதிகரிப்பால் நஷ்டத்தைச் சந்திக்கும் விவசாயிகள்!

ணவுக்கு மணமூட்டும் புதினாவுக்கு வருடம் முழுவதுமே தேவை இருக்கும் காரணத்தினால் புதினா அனைத்துக் காலத்திலும் பயிரிடப்படும் ஒரு விளைப்பொருளாகவே உள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் புதினா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது புதினா விளைச்சல் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. கர்நாடகாவில் தொடங்கியுள்ள பருவ மழையின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளிலும் லேசான மழை பெய்திருக்கிறது. இதன் காரணமாகவே தற்போது புதினா விளைச்சல் அதிகரித்துள்ளது.

விளைச்சல் குறைவாக இருந்த காலத்தில் ஒரு கட்டு 25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதன் காரணமாக அதிக அளவிலான புதினா சந்தைகளுக்குக் கொண்டுவரப்படுகின்றன. இதனால் விற்பனையாளர்கள் குறைந்த விலையிலேயே புதினாவை வாங்கிச் செல்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது கட்டு ஒன்று 10 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் புதினா சாகுபடி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து இருக்கின்றனர். குறிப்பாக, தற்போது 100 எண்ணிக்கை கொண்ட ஒரு மூட்டை 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் கூடுதல் உற்பத்தி நேரங்களில் பயன் அளிக்கும் வகையில் விவசாயிகளுக்கு புதினாவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் மதிப்புக் கூட்டு பொருட்கள் உற்பத்தியை மேற்கொள்வதற்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com