தண்ணீர் இல்லாமல் வாடிய வேர்க்கடலை செடிகள்: இழப்பை சந்திக்கும் விவசாயிகள்!

தண்ணீர் இல்லாமல் வாடிய வேர்க்கடலை செடிகள்: இழப்பை சந்திக்கும் விவசாயிகள்!

சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகாவில் வேர்க்கடலை பயிரிட்டு நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகள், தங்கள் வேதனையை அரசுக்கு கோரிக்கைகளாக முன்வைத்துள்ளனர்.

நடப்பாண்டில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்தியா முழுவதும் விவசாயத் துறை பல்வேறு வகையான பாதிப்புகளைச் சந்தித்து இருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் நடப்பாண்டில் போதிய அளவு மழை இல்லாமல் பலவகைப் பயிர்களை விவசாயம் செய்த எண்ணற்ற விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கின்றனர். இப்படி விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு வகையான பாதிப்புகளை கல்கி ஆன்லைன் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.

இந்த நிலையில், போதிய அளவு இல்லாமலும், கடுமையான வெயில் காரணமாகவும் சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகாவில் பல நூறு ஏக்கரில் வேர்க்கடலை சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விவசாயத்தை பெரிதாக நம்பியிருந்த விவசாயிகள் பலரின் நம்பிக்கையை தகர்க்கும் வண்ணம் நடப்பாண்டில் போதிய அளவு மழை பெய்யாத காரணத்தினாலும், சுட்டெரிக்கும் வெயிலினுடைய தாக்கத்தினாலும் வேர்க்கடலை செடிகள் நடுத் தன்மையிலேயே காய்ந்து இருக்கின்றன.

இதனால் ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் நஷ்டத்தை அடைந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதில் சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகாவுக்கு உட்பட்ட பூச்சம்பட்டி கிராமத்தில் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வேர்க்கடலை செடிகளில் கடலை முளைக்காமலேயே கருகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி முழுமையாக காய்ந்த செடிகளால் இனி பயன் ஏதும் இல்லை என்றும், இந்த செடிகளை ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் தீவனமாக மட்டுமே இனி கொடுக்க முடியும் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதே சமயம், தமிழக காவிரி பாசன பகுதியான சேலம் மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளுக்கு காவிரியின் உபரி நீர் கூட சென்றடையாத நிலை நிலவுகிறது. இப்படியே சங்ககிரி தாலுகாவின் சில பகுதிகளுக்கும் காவிரி நீர் சென்றடைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்றம் நிறைந்த பகுதிகளாக இவை இருப்பதால் தண்ணீர் கொண்டு செல்வதிலும் சிக்கல் இருக்கிறது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு அரசு பம்பிங் சிஸ்டம் மூலம் உபரி நீர் கிடைக்காத பகுதிகளுக்கும் காவிரி நீரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com