சம்மரைச் சமாளிக்க வளர்ப்பு நாய்களுக்கு சிக்கன் பாப்சிகல்!

சம்மரைச் சமாளிக்க வளர்ப்பு நாய்களுக்கு சிக்கன் பாப்சிகல்!

ரினி தலால் எனும் வளர்ப்பு பிராணிகளுக்கான ஊட்டச்சத்து நிபுணர் ஒருவர் சமீபத்தில் ஊடகச் செய்தி ஒன்றில் பகிர்ந்திருந்த இந்த தகவல் முற்றிலும் புதுமையானதாகத் தோன்றியது எனக்கு. இதுவரை இப்படி எல்லாம் செய்யலாம் என்பது நான் கேள்விப்படாத ஒரு விஷயமாகவே இருந்தது . ஆனால், பாருங்கள், வளர்ப்புப் பிராணிகள் மட்டும் என்ன பாவம் செய்தன? நாம் அனுபவிக்கும் செளகரியங்களை அவைகளும் தான் கொஞ்சம் அனுபவித்து விட்டுப் போகட்டுமே! சிலர் தங்கள் சொந்தக் குழந்தைகளைப் போலப் பாவித்து வளர்ப்புப் பிராணிகளையும் இரவில் தங்களுடன் படுக்கை அறையில் ஏஸி அறையில் தூங்க வைக்கிறார்கள். அப்படி எல்லாம் செய்ய முடியும் போது இதையும் கூட முயற்சிக்கலாம்.

அவர் சொன்னது இது தான். இந்த சம்மரில் கொடும் வெயிலைச் சமாளிக்க முடியாமல் மனிதர்களான நாம் பல முயற்சிகளை மேற்கொள்கிறோம்.

· குளிர்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வது.

· ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், ஃப்ரெஷ் ஜூஸ், மோர், இளநீர் அருந்தி உடல்சூட்டைக் குறைப்பது.

· இரவுகளில் ஏஸியில் ஹை கூல் செட் செய்து கொண்டு தூங்குவது

· பொது இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால் கையோடு ஐஸ் வாட்டர் பாட்டில் கொண்டு செல்வது.

· வாரத்திற்கு 1 முறையேனும் நல்லெண்ணெயில் ஊறி முழுக்குப் போடுவது.

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால், வளர்ப்புப் பிராணிகள் சம்மரைச் சமாளிக்க என்ன செய்யும்?

அதிகபட்சம் நாய்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு தன் உடல் சூட்டை சமநிலைப்படுத்த முயற்சிக்கும். ஆனால், அதெல்லாம் இந்தக் கோடைக்குப் போதுமா என்ன? அதற்காகத் தான் இந்தப் புது முயற்சி...

உங்கள் வீட்டில் ஒரே ஒரு வளார்ப்புப் பிராணி (நாய்) தான் இருக்கிறது என்றால் 200 கிராம் சிக்கன் வாங்கி அதை வெறும் தண்ணீரில் உப்பும், மஞ்சளும் கலந்து கொஞ்சம் திக்கான சூப் பதத்தில் குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெளியில் எடுத்து சூடு ஆறியதும் அந்தக் கலவையை அப்படியே ஃப்ரீஸரில் குச்சி ஐஸ் செய்வதற்குப் பயன்படுத்தும் பாப்சிகல் மோல்டுகளில் ஊற்றி மேலே குச்சியையும் சொருகி சுமார் 8 மணி நேரம் உறைய வைக்க வேண்டும். இதோ தயாராகி விட்டதே வளர்ப்பு நாய்களுக்கான சிக்கன் குச்சி ஐஸ். இதெல்லாம் இதுவரை நான் கேள்விப்பட்டிராத விஷயம். நாய் ஆர்வலர்கள்

மற்றும் வளர்ப்பு பிராணிகள் மீது அபார நேசம் கொண்டவர்கள் நிச்சயம் ஒருமுறை முயற்சித்துப்பாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com