தினமும் வேப்பிலை சாப்பிட்டால் உங்களை இந்த நோய்கள் அண்டாது!

Neem Health Benefits.
Neem Health Benefits.

வேப்பிலை என்றாலே சிலருக்கு முகம் கோணல் மானலாக மாறும். ஏனென்றால், அதன் கசப்பு சுவையை யாரும் அறியாதவர்கள் இல்லை. பொதுவாகவே, கிராமப்புறங்களில் உள்ள எல்லா வீடுகளிலுமே வேப்பமரம் இருக்கும். அதன் மகத்துவத்தை அறிந்துதான் நம் முன்னோர்கள் வேப்ப மரத்தை தங்களின் அருகிலேயே வைத்திருக்கிறார்கள்.

வேப்ப மரத்தின் மருத்துவ குணங்கள் பற்றி பலர் பேசுவதை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். வேப்ப மரத்தின் இலை, பூ, பட்டை, காய், குச்சி என மரம் முழுவதுமே பல மருத்துவ குணங்கள் நிறைந்தவை. அதனால்தான் வேப்ப இலைகளை தினசரி உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இதை அரைத்து செய்யப்படும் பானங்களை குடிப்பதற்கு கஷ்டமாக இருந்தாலும், அதை தினசரி குடித்து வருவதால் பல நன்மைகள் ஏற்படும்.

‘வேப்ப இலைகளை வெறும் வயிற்றில் உட்கொண்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்’ என்கின்றனர். வேப்ப இலைகளில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அது கல்லீரலில் ஏற்படும் பிரச்னைகளை எதிர்த்துப் போராடுகிறது. ஆக்சிஜனேற்ற அழுத்தத்தால் கல்லீரலில் ஏற்படும் சேதத்தையும் இது தடுக்கிறது.

வேப்ப இலை கசப்பு சுவை கொண்டதால், பெரும்பாலும் நீரிழிவு நோயுடன் இதற்குத் தொடர்புள்ளதென்பது உங்களுக்கே தெரியும். பலர் தங்களின் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க இதை தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்கிறார்கள். எனவே, நீரிழிவு நோயாளிகள் வேப்ப இலைகளை உட்கொள்வது நல்லது.

வேப்ப இலைகளில் உள்ள பொதுவான மருத்துவ குணங்களில் ஒன்று வயிறு தொடர்பான பிரச்னைகளை குணப்படுத்துவதாகும். பொதுவாக, மலச்சிக்கலை இது குணப்படுத்துகிறது. மேலும், குடல் அமைப்பு மற்றும் உணவுக் குழாயை நோய்க் கிருமிகளிடமிருந்து பாதுகாக்கிறது. மனிதர்கள் பின்பற்றும் தவறான வாழ்க்கை முறை, உட்கொள்ளும் உணவு, மதுப்பழக்கம் போன்றவற்றால் குடல் பல தொற்றுநோய்களுக்கு உள்ளாகிறது. இதனால் உங்களுக்கு சில நேரங்களில் மிக மோசமான பிரச்னைகள் கூட ஏற்படலாம்.

எனவே, வேப்ப மர இலைகளை தினசரி நேரடியாகவோ அல்லது ஜூஸ் போல குடித்து வந்தால் அதன் மருத்துவ குணங்கள் அனைத்தையும் நீங்கள் பெற முடியும். அதேசமயம், வேப்ப இலைகளை அளவுக்கு அதிகமாகவும் உட்கொள்ளக் கூடாது. இதிலிருந்து உங்களுக்கு எந்த ஊட்டச்சத்துக்களும் கிடைக்காது. இதைப் பற்றி பலர் தவறாகப் புரிந்து கொண்டு, அதிகமாக சாப்பிட்டு, வயிற்று உபாதைகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com