Puliyotharai
Puliyotharai

இரண்டாம் நாள்: புளியோதரை நைவேத்தியம்

நவராத்திரி நவ நைவேத்தியம்

புளியோதரை நைவேத்தியம்

தேவையான பொருட்கள்:

புளி - 50 கிராம்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

வெந்தயம் - 1/2 ஸ்பூன்

உப்பு -1 டேபிள்ஸ்பூன்

மிளகாய் வற்றல் - 12 பாதியாக கிள்ளியது

பெருங்காயம் - 1/2 ஸ்பூன்

கடுகு - ஒரு ஸ்பூன்

கடலை பருப்பு - 2 ஸ்பூன்

எள்- 4 ஸ்பூன்

வேர்கடலை - 50 கிராம்

இட்லி மிளகாய் பொடி -1 ஸ்பூன்

கருவேப்பிலை - கொஞ்சம்

நல்லெண்ணெய் - 1கரண்டி

செய்முறை :

புளியை நன்கு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணை வைத்து சூடானதும் மஞ்சள்தூள், கடுகு வெந்தயம், மிளகாய் வற்றல், பெருங்காயம், கடலைப்பருப்பு,

எள், இட்லி மிளகாய் பொடி, வேர்கடலை

கருவேப்பிலை சேர்த்து, கரைத்த புளியைவிட்டு , உப்பு சேர்த்து

நன்கு கொதித்ததும், அடுப்பை சிறியதாக்கி 10 நிமிடம் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும் நன்கு உருண்டு வரும்போது அடுப்பை அணைத்து இறக்கி விடவும்.

Payatham paruppu sundal
Payatham paruppu sundal

பயத்தம் பருப்பு சுண்டல்

தேவையான பொருட்கள்:

பயத்தம் பருப்பு -1 கப்

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு -1 ஸ்பூன்

மிளகாய் வற்றல் - 8

துருவிய தேங்காய் - 1/4 கப் பெருங்காயம் - ஒரு சிட்டிகை

உப்பு - தேவைக்கேற்ப

கருவேப்பிலை - சிறிது

செய்முறை :

பயத்தம் பருப்பை நன்கு களைந்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். பின்பு அதனை உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடியவைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணை வைத்து கடுகு, மிளகாய் வற்றல், பெருங்காயம், வெந்த பயத்தம் பருப்பு கறிவேப்பிலை , துருவிய தேங்காய் போட்டு கிளறி இறக்கவும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com