
தேவையான பொருட்கள்:
சாதம் -1 கப்
எலுமிச்சம்பழம் - 2
கடுகு - 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன் கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
வேர்க்கடலை - ஒரு கைப்பிடி அளவு பச்சை மிளகாய் - 6
பெருங்காயம்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
நெய் -1 ஸ்பூன்
செய்முறை:
சாதத்தை நன்றாக வேக வைத்து ஆற வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள், வேர்க்கடலை சேர்த்து நன்றாக வதக்கி ஆறிய சாதத்துடன் இதை போட்டு நன்றாக கலக்கவும். எலுமிச்சம் பழச் சாறு பிழிந்து உப்பு சேர்த்து கொட்டை இல்லாமல் சாதத்தில் வடிகட்டவும். ஒரு ஸ்பூன் நெய்யில் முந்திரிப்பருப்பு தாளித்து இதனுடன் சேர்த்து கலந்து கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு இறக்கவும்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை பட்டாணி -1 கப்
எண்ணெய் -1ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - ஒரு துண்டு
இட்லி மிளகாய் தூள்-1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
கடுகு -1 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
கருவேப்பிலை
பெருங்காயம்
செய்முறை:
பச்சை பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைக்கவும். மறுநாள் காலை அதை களைந்து உப்பு போட்டு வேகவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, கடுகு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், இஞ்சி, இட்லி மிளகாய் பொடி போட்டு நன்றாக வதக்கிக் வெந்த பட்டாணியை அதில் போட்டு நெய்விட்டு நன்றாகக் கிளறி கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு இறக்கவும்.