Sarkkarai pongal
Sarkkarai pongal

மூன்றாம் நாள்: சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம்

நவராத்திரி நவ நைவேத்தியம்

சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம்

தேவையான பொருட்கள்:

அரிசி -2 கப்

பயத்தம் பருப்பு - 1கப்

பால் - 1 கப்

வெல்லம் - 2 கப் (பாகுவைத்து கல் மற்றும் தூசியை வடிய வைத்தது)

முந்திரிப்பருப்பு -10

திராட்சை - 5

துருவிய தேங்காய் - 1/2 கப்

நெய் 1/2 கப்

செய்முறை :

அரிசி, பயத்தம் பருப்பு தனித்தனியே சிவக்க வறுத்துக் கொள்ளவும். வெங்கலப் பானையில் பாலை ஊற்றி, வறுத்த அரிசியையும் பருப்பையும் நன்றாக களைந்து போட்டு அடிக்கடி கிளறவும். நன்றாக பொங்கல் வெந்ததும் பொங்கலாக வெந்ததும் வெல்லப்பாகை ஊற்றி நன்கு கிளறவும். வாணலியில் நெய் விட்டு முந்திரி பருப்பு திராட்சை வறுத்து அதில் போடவும்.

தேங்காய் துருவலையும் நன்றாக நெய்யில் வறுத்து போடவும் ஏலக்காய் தூவி இறக்கவும்.

மொச்சை கடலை சுண்டல்

தேவையான பொருட்கள்:

மொச்சை கொட்டை - 100 கிராம்

பச்சை மிளகாய் -5

இஞ்சி - 1 துண்டு

உப்பு தேவைக்கேற்ப

இட்லி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்

கடுகு 2 ஸ்பூன்

எண்ணெய் - தாளிக்க

நெய் - 2 ஸ்பூன்

கடலைமாவு - 2 ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

மொச்சைக் கொட்டையை கடலையை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளவும். மறுநாள் காலை நன்கு சுத்தமாக களைந்து எடுத்து வைத்து , தண்ணீருடன் உப்பு சேர்த்து, நன்றாக வேகவிட்டு வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு , கடுகு

மஞ்சள் தூள், பச்சை மிளகாய் , இஞ்சி இட்லி மிளகாய் பொடி, மொச்சையை போட்டு கடலைமாவை கரைத்து ஊற்றி நன்றாக கலக்கவும். நெய்யில் கறிவேப்பிலையை வறுத்து போடவும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com