பறவை கூடு
பறவை கூடு

பறவை கூடு

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3

பனீர் - 100 கிராம்

சோள மாவு - 2 டீஸ்பூன்

சேமியா- 1 கப்

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு

உப்பு - சுவைக்கேற்ப

கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து நன்கு மசித்து கொள்ளவும்.

மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து பிசைந்து கொள்ளவும்.

பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளை உருவாக்கவும், பின்னர் கிண்ண வடிவில் செய்யவும்.

சோள மாவை எடுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாக (தோசை மாவு பதத்தில்) தயாரிக்கவும்.

உருளைக்கிழங்கு கிண்ணங்களை சோள மாவு மாவில் தோய்க்கவும்.

பின்னர் சேமியாவில் நன்கு பிரட்டி கொள்ளவும்.

5 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

பனீரை உதிர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

இப்போது எண்ணெயை சூடாக்கி

பனீர் உருண்டைகளை சேர்த்து சிவக்காமல் எடுத்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கு கிண்ணங்களை கவனமாக எண்ணெயில் போடவும்.

3 முதல் 4 நிமிடங்கள் வரை வறுக்கவும், பொன்னிறமாக மாறும் வரை திருப்பி வைக்கவும்.

உங்கள் சுவையான உருளைக்கிழங்கு பறவைகளின் கூடு தயாராக உள்ளது.

இறுதியாக பனீரை அலங்கரித்து தக்காளி சாஸுடன் சாப்பிடவும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com