குடைமிளகாய் கிரேவி!

குடைமிளகாய் கிரேவி
குடைமிளகாய் கிரேவி

குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் அது நம் உடலுக்கு ஆரோக்கியமான ஒரு காய்கறியாக கருத படுகிறது. வைட்டமின் சி நிறைந்திருக்கும் காய்கறிவகளை மருதுவார்கள் அதிகம் சேர்க்க சொல்லுவர்.

அந்த வகையில் குடைமிளகாயில் வைட்டமின் சி ஏராளமாக இருப்பதால் அதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது, நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

ஆனால், சிலர் அதை வாங்கினாலும் அவர்களுக்கு அதை எப்படி சமைப்பது என்பது தெரிவது இல்லை. அதை ஈசியாகவும் சுவையாகவும் எப்படி சமைபது என்பதை பற்றி பார்ப்போம்.

குடைமிளகாய் கிரேவி
குடைமிளகாய் கிரேவி

தேவையான பொருட்கள்:

பெருங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது),

முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்,

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,

மல்லித் தூள் – ½ டீஸ்பூன்,

கரம் மசாலா – ¼ டீஸ்பூன்,

உலர்ந்த வெந்தயம் கீரை – ¼ டீஸ்பூன்,

தக்களின் – 2 (நறுக்கியது),

சர்க்கரை – ¼ டீஸ்பூன்,

தண்ணீர் – ½ கப்,

உப்பு – தேவையான அளவு,

எண்ணெய் – 2 டீஸ்பூன்,

சீரகம் – ½ டீஸ்பூன்,

பூண்டு – 1 (பொடியாக நறுக்கியது).

செய்முறை:

1. முதலில் சுடுநீரில் முந்திரியை போட்டு சில நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும், நன்கு ஊறிய பின் அதை பெஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பின் தக்காளியை தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கவும்.

2. ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் மிதமான சூடு வந்த பின் சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும் அதனுடன் அரை தக்கழியையும் ஊற்றி கிளறி விடவும்.

3. பின் கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து குறைவான தீயில் பச்சை வாசனை போகும் வரை கிளறி விட்டு கொதிக்க வைக்கவும், பச்சை வாசனை போக எப்படியும் 10 நிமிடங்களாவது ஆகும்.

4. பச்சை வசனை போன பின், அதில் நாம் அறைத்து வைத்துள்ள முந்திரி பெஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, நீர் ஊற்றி ஒரு முறை நன்கு கிளறி விடவும்.

5. இறுதியாக வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வேக வைக்கவும். அதன் பின் மேலே காய்ந்த வெந்தயக் கீரையை கையால் நசுக்கி தூவி கிளறி இறக்கினால், ஈஸியான சுவையான குடைமிளகாய் கிரேவி ரெடி.

இந்த குடைமிளகாய் கிரேவி சப்பாதிக்கு அற்புதமான சைடிஷ்ஷாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த குடைமிளகாய் கிரேவியை விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடுவர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com