கிறிஸ்துமஸ் கலர்ஃபுல் கேக் வகைகள்!

ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஹனி கேக்
ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஹனி கேக்

1. ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஹனி கேக்

தேவையான பொருட்கள்:

1 1/4 கப் - மைதா

3/4 கப் - சீனி

1/2 கப் - எண்ணெய்

1/2 கப் - தயிர் 

1 டீஸ்பூன் - பேக்கிங் பவுடர்

1/2 டீஸ்பூன் - பேக்கிங் சோடா

1 1/2 டீஸ்பூன் - ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர்டாப்பிங் செய்ய

1/4 கப் - தேன்

1 டேபிள் ஸ்பூன் - சீனி

1/4 கப் - ஸ்ட்ராபெர்ரி ஜாம்

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர் சலித்த மைதா,பவுடர் சுகர்,பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர் ,ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர் அனைத்தையும் சேர்த்து விஸ்க்கால் நன்றாக கடைந்து கொள்ளவும்.பின்னர் கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, மாவு கலவையை ஊற்றிக் கொள்ளவும்.

அடுப்பில்  கடாய் வைத்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் சூடாக்கி கொள்ளவும்.சிறிய ஸ்டாண்ட் வைத்து கேக் பாத்திரத்தை உள்ளே வைத்து மூடி வைக்கவும்.20 - 30 நிமிடங்கள் சிறுதீயில் வைத்திருந்து வெந்த பின் இறக்கி ஆறவைத்து கொள்ளவும்.பின்னர் சிறிய வாணலியில் சீனி ,2 டீஸ்பூன் தண்ணீர் ஜாம் சேர்த்து வைத்திருந்து உருகியதும் தேன் சேர்த்து இறக்கி வைக்கவும்.கேக்கின் மேல் சிறிய குச்சியால் லேசாக 5-7 சிறுதுளைகள் போட்டு கொள்ளவும்.ஜாம் கரைசலை சிறிது,சிறிதாக மேலே பரவலாக ஊற்றவும்.10 நிமிடம் வைத்திருந்து வெட்டி பரிமாறவும்.

சிறிய ஸ்டாண்ட் வைத்து கேக் பாத்திரத்தை உள்ளே வைத்து மூடி வைக்கவும்.

20 - 30 நிமிடங்கள் சிறுதீயில் வைத்திருந்து வெந்த பின் இறக்கி ஆறவைத்து வெட்டி பரிமாறவும்.

2. ஹோம்மேட் வெனிலா கேக்

தேவையான பொருட்கள்:

1 1/4 கப் - மைதா

3/4 கப் - சீனி

1/2 கப் - எண்ணெய்

1/2 கப் - தயிர் 

1 டீஸ்பூன் - பேக்கிங் பவுடர்

1/2 டீஸ்பூன் - பேக்கிங் சோடா

1 1/2 டீஸ்பூன் - ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர்

ஹோம்மேட் வெனிலா கேக்
ஹோம்மேட் வெனிலா கேக்

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர் சலித்த மைதா,பவுடர் சுகர்,பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர் ,ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர் அனைத்தையும் சேர்த்து விஸ்க்கால் நன்றாக கடைந்து கொள்ளவும்.

பின்னர் கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, மாவு கலவையை ஊற்றிக் கொள்ளவும்.

அடுப்பில்  கடாய் வைத்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் சூடாக்கி கொள்ளவும்.

3. கோதுமை வெல்ல கேக்

  • தேவையான பொருட்கள்:

  • 1 1/4 கப் - கோதுமை மாவு

  • 3/4 கப் - வெல்ல தூள் (ஆர்கானிக்) 

  • 1/2 கப் - எண்ணெய்

  • 1/2 கப் - தயிர் 

  • 1 டீஸ்பூன் - பேக்கிங் பவுடர்

  • 1/2 டீஸ்பூன் - பேக்கிங் சோடா

  • 1 1/2 டீஸ்பூன் - வெனிலா எஸென்ஸ

கோதுமை வெல்ல கேக்
கோதுமை வெல்ல கேக்

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர் சலித்த கோதுமை மாவு,வெல்ல தூள்,பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர் ,வெனிலா எஸென்ஸ் அனைத்தையும் சேர்த்து விஸ்க்கால் நன்றாக கடைந்து கொள்ளவும்.பின்னர் கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, மாவை ஊற்றிக் கொள்ளவும்.

அடுப்பில்  கடாய் வைத்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் சூடாக்கி கொள்ளவும்.சிறிய ஸ்டாண்ட் வைத்து கேக் பாத்திரத்தை உள்ளே வைத்து மூடி வைக்கவும்.20 - 30 நிமிடங்கள் சிறுதீயில் வைத்திருந்து வெந்த பின் இறக்கி நன்றாக ஆறவைக்கவும்.பின்னர் வில்லைகளாக்கி பரிமாறவும். ( ஆர்கானிக் வெல்ல தூள் என்றால் மண் இருக்காது)

4.கலர்ஃபுல் மில்க்மெயிட் கேக்

தேவையான பொருட்கள்:

  • 1 1/4 கப் - மைதா

  • 3/4 கப் - சீனி

  • 1/2 கப் - எண்ணெய்

  • 1/2 கப் - தயிர்

  •  1 டீஸ்பூன் - பேக்கிங் பவுடர்

  • 1/2 டீஸ்பூன் - பேக்கிங் சோடா

  • 1 1/2 டீஸ்பூன் - வெனிலா எஸென்ஸ்

  • 1/2 டீஸ்பூன் - பிங்க் ஃபுட் கலர்

  •  1/2 டீஸ்பூன் - பச்சை ஃபுட் கலர்

  • தேவையான அளவு - மில்க்மெய்ட் ( டாப்பிங் செய்ய)

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர் சலித்த மைதா,பவுடர் சுகர்,பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர் ,ஸ்ட்ராபெர்ரி ஃபிளேவர் அனைத்தையும் சேர்த்து விஸ்க்கால் நன்றாக கடைந்து கொள்ளவும்.பின்னர் இருபாத்திரத்தில் ஊற்றி கொள்ளவும்.இரு வண்ணங்களையும் இரண்டு பாத்திரங்களில் உள்ள கலவைகளில் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.பின்னர் கேக் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, மாவு கலவையை ஒன்றன் மீது ஒன்றாக ஊற்றிக் கொள்ளவும்.

அடுப்பில்  கடாய் வைத்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் சூடாக்கி கொள்ளவும்.சிறிய ஸ்டாண்ட் வைத்து கேக் பாத்திரத்தை உள்ளே வைத்து மூடி வைக்கவும்.20 - 30 நிமிடங்கள் சிறுதீயில் வைத்திருந்து வெந்த பின் இறக்கி நன்றாக ஆறவைக்கவும்.அதன் மேல்பரப்பில் பைப்பிங் பையில் மில்க்மெயிட் நிரப்பி மேலே அலங்கரித்து வெட்டி பரிமாறவும்.

5.பட்டர் குக்கீஸ்

தேவையான பொருட்கள் :

  • 2 கப் - மைதா மாவு 

  • 1 கப் -  வெண்ணெய்

  • பொடித்த1 கப் - சீனி ( பொடித்தது)

  • 1/4 டீஸ்பூன் -உப்பு,

  • 1/4 டீஸ்பூன் -பேக்கிங் பவுடர் -டீஸ

பட்டர் குக்கீஸ்
பட்டர் குக்கீஸ்

செய்முறை: 

மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாகக் கலந்து நன்றாக சலித்துக் கொள்ளவும். வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் கலந்து மிருதுவாகும் வரை நன்கு கலந்து கொள்ளவும். சர்க்கரை நன்றாக கரைந்தவுடன் இதனுடன் மைதா, பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்துக் கலந்து பிசைந்து கொள்ளவும். இந்த மாவை பட்டர் பேப்பரின் மீது  வட்டமாக  பரப்பி கொள்ளவும் பின்னர் நமக்கு விருப்பமான வடிவத்தில் அச்சு எடுக்கவும். ( பாட்டில் மூடியின் உதவியுடன் கூட அச்சு எடுக்கலாம் )

ஒரு தட்டில் நெய் தடவி, மேலே மைதா மாவு தூவி, செய்து வைத்த துண்டுகளை சிறிது இடைவெளிவிட்டு அடுக்கி கொள்ளவும். அடிகனமான வாணலியில் மணல் அல்லது உப்பு சேர்த்து  சூடுபடுத்தி, அதன் மேல் தட்டை வைத்து,  மூடியால் இறுக்கமாக மூடவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 - 30 நிமிடங்கள் ஆகும்.வாசனை வர ஆரம்பித்ததும் அடுப்பை அணைக்கவும். சிறிது நேரத்துக்குப் பிறகு பிஸ்கட்டுகளை வெளியே எடுக்கவும். ஆறியபின் பரிமாறவும் . 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com