ஜலதோஷ நிவாரண உணவுகள்

ஜலதோஷ நிவாரண உணவுகள்

குழம்பு வகைகள்

ம. இந்திராணி, கோவை

 

இஞ்சிக் குழம்பு

தேவையான பொருள்கள்: இஞ்சி – 50 கிராம், பச்சை மிளகாய் – 4, பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் – கால் கப்,, தக்காளி – 1, பளி – சிறிய எலுமிச்சை அளவு, தேங்காய் சிறிய மூடி – 1, மஞ்சள் பொடி – அரை ஸ்பூன், எண்ணெய் – 25 மில்லி, கடுகு – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: இஞ்சியைச் சுத்தம் செய்து தேங்காயுடன் நைசாக நீர்விட்டு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, அரிந்த பச்சை மிளகாய், வெங்காயம் வதக்கி, தக்காளி சேர்த்து புளிக்கரைசல் ஊற்றவம். மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து அரைத்த விழுதினையும், சேர்த்து, கொதித்து எண்ணெய் பிரியும்போது இறக்கவும்.

பூண்டுக் குழம்பு

தேவையான பொருள்கள்: உரித்த பூண்டு – அரை கப், நறுக்கிய வெங்காயம் – கால் கப், வெந்தயம் – கால் ஸ்பூன், மஞ்சள் பொடி – அரை ஸ்பூஜ், நல்லெண்ணெய் – 25 மில்லி, கெட்டியான புளிக்கரைசல் – 1 கரண்டி, கறிவேப்பிலை, கடுகு, மிளகாயப் பொடி – 2 ஸ்பூஜ், தனியா – 2 ஸ்பூஜ், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு வெடித்ததும் பூண்டு ேசர்த்து வதக்கவும். பின் வெங்காயம் போட்டு வதங்கியதும் பொடிகளைச் சேர்த்து உப்பு போட்டு, புளிக்கரைசலை ஊற்றி எண்ணெய் பிரியும்போது வெந்தயத்தைப் பொடி செய்து போட்டு இறக்கவும்.

தனியா விதை சட்னி

தேவையான பொருள்கள்: தனியா விதை – 25 கிராம், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய்த் துருவல் – 1 மூடி (துருவியது), புளி – எலுமிச்சை அளவு, கல் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அனைத்தையும் கருகாமல் சிவக்க வறுத்து, மிக்ஸியில் நீர்விட்டு கெட்டியாக அரைத்தெடுக்கவும். சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

கற்பூரவல்லி இலை மோர்க் குழம்பு

தேவையான பொருள்கள்: கெட்டியாகக் கடைந்த மோர் – 2 கப், கற்பூரவல்லி இலை – 10, காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள் பொடி- சிறிது, உப்பு – தேவையான அளவு

செய்முறை: இலையை நைசாக மிக்ஸியில் அரைத்து மோருடன் கலக்கவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மிளகாய் கிள்ளிப் போட்டு மோர்க் கரைசலைச் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி போடவும். நுரைத்துப் பொங்கும்போது இறக்கவும்.

கொள்ளுத் தொக்கு

தேவையான பொருள்கள்: மலர வேக வைத்த கொள்ளு – 1 கப், வெல்லம் – 1 கால் கப், தேங்காயத் துருவல் – 4 ஸ்பூஜ், ஏலப் பவுடர் – 2 சிட்டிகை, நெய் – 50 கிராம்.

செய்முறை: கொள்ளையும், வெல்லத்தையும் மிக்ஸியில் போட்டு, அரைத்து, தேங்காயத் துருவல், ஏலம் சேர்த்து, கலந்து எடுத்து சூடான நெய்விட்டு, அப்படியே சாப்பிடலாம். போளியாகவும் தயாரித்துச் சாப்பிடலாம்.

பச்சைக்கொள்ளு ரசம்

தேவையான பொருள்கள்: கொள்ளு -  1 கைப்பிடி, புளி சிறிய உருண்டை (நெல்லிக்காயளவு), உப்பு, காய்ந்த மிளகாய் – 2, சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – ½ ஸ்பூன், மஞ்சள் பொடி – ½ ஸ்பூன், பூண்டு – 2 பல், தாளிக்க எண்ணெய் – 1 ஸ்பூன், கடுகு – ½ ஸ்பூன், கறிவேப்பிலை – 1 ஈர்க்க.

செய்முறை: கொள்ளினை அரைமணி நேரம் ஊறவைத்து அதனுடன் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்தையும் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்ததைவிட்டு இரண்டு கப் நீர் சேர்த்து உப்புப் போட்டை கொதித்து நுரைத்து வரும்போது இறக்கவும்.

புதினா டீ

தேவையான பொருள்கள்: புதினா – 10 இலை, பால் – 1 தம்ளர், டீத்தூள் – 1 ஸ்பூஜ், சர்க்கரை.

செய்முறை: பாலுடன் புதினா, சர்க்கரை சேர்த்து இரு நிமிடங்கள் கொதித்த பின்னர் டீத்தூள் சேர்த்துக் கொதித்ததும் இறக்கி வடிகட்டி பருகவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com