உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும்  வெள்ளரிக்காய் பச்சடி!

உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்கும்  வெள்ளரிக்காய் பச்சடி!

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய்  - 1/2கிலோ

தேங்காய் துருவல் - 5ஸ்பூன்

சீரகம்  - 1ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

கடுகு  - 1ஸ்பூன்

கறிவேப்பிலை - தேவைக்கு

தேங்காய் எண்ணெய் - 2ஸ்பூன்

தயிர் - 3ஸ்பூன்

வற்றல் - 2

செய்முறை:

வெள்ளரிக்காயை சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொண்டு அடுப்பில் வாணலியை ஏற்றி வெள்ளரிதுண்டுகளை சிறிது நீர் விட்டு உப்பு சேர்த்து வேக விடவும். 

ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், மிளகாய், கறிவேப்பிலை, 1/4 ஸ்பூன் கடுகு சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். வெள்ளரிக்காய் வெந்ததும் தேங்காய் மசாலாவை போட்டு கிளறி சிறிது நேரம் கழித்து இறக்கவும் ஆறிய பின் தயிரை ஊற்றி நன்கு கலக்கி உப்பு சரி பார்த்து தேவை என்றால் போட்டு கொள்ளலாம்.

பின்னர் தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து 2ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, வற்றல், கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

சாதம், சப்பாத்தியோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com