இளநீர் பாயாசம்!
இளநீர் பாயாசம்!

இளநீர் பாயாசம்!

தேவையான பொருட்கள்:

பால் : 1/2 லிட்டர்

தேங்காய் பால் : 1/2 லிட்டர்

இளநீர் வழுக்கை: 4

கண்டென்ஸ்ட் பால்: 100 மில்லி லிட்டர்

சக்கரை: 100 கிராம்

முந்திரி: 3

திராச்சை: 3

ஏலக்காய்: 2

செய்முறை:

இளநீர் வழுக்கையை சின்னச்சின்னதாக நறுக்கி கொள்ளவும்.

ராபடி:

ஒரு வாணலியில் சுத்தமான பாலை ஊற்றி கொள்ள வேண்டும். ஒரு கரண்டி வைத்து நன்றாக 10-15 நிமிடம் கலக்க வேண்டும். 1/2 லிட்டர் பால் நன்றாக சுண்டி 100 கிராம் ஆகும் வரை கெட்டியாக வேண்டும். பின் 100 கிராம் சக்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளவும். ராபடி ரெடி.

ஒரு பாத்திரத்தில் 3 டேபிள் ஸ்பூன் கண்டென்ஸ் பாலை ஊற்றவும் அத்துடன் நாம் செய்து வைத்திருக்கும் ராபடியை சேர்க்கவும் இதை நன்றாக கலக்கவும். ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி, 1/2 தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

இளநீர் வழுக்கை வைத்திருக்கும் பாத்திரத்தின் மேல் வடிகட்டி வைத்து நாம் செய்து வைத்திருக்கும் ராபடி தேங்காய் பால் கலவையை ஊற்றி வடிகட்ட வேண்டும். அதன் பிறகு ஏலக்காய் , நெயில் வறுத்த முந்திரி , திராச்சை இவற்றை அதில் சேர்க்க வேண்டும்.

பின் அவற்றை 1 1/2 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்து பரிமாறவும். அருமையான இளநீர் பாயாசம் ரெடி.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com