அவல் பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?
தேவையானவை :
அவல் - 200 கிராம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிது
பெருங்காயம் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - அரை கப்
தாளிக்க : கடுகு, உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பு, சீரகம்
தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை :
இந்த அவல் பிடி கொழுக்கட்டை செய்வதும் எளிது. சத்தும் நிறைந்தது. வெங்காயம் ஒன்றை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு எல்லாம் ஒவ்வொரு ஸ்பூன் போட்டு நறுக்கிய பச்சை மிளகாய் இரண்டு, கருவேப்பிலை சிறிது கிள்ளி சேர்த்து தேங்காய் எண்ணெய் விட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் கலர் மாறும் வரை வதக்கி கொள்ளவும்.
மெல்லிய அவல் சீக்கிரம் ஊறிவிடும். எனவே கடுகு தாளிக்கும் சமயம் அவலில் தண்ணீர் விட்டு இருமுறை களைந்து கையால் பிழிந்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். ஊற விட வேண்டிய அவசியம் இல்லை. தண்ணீரில் அலசும் போதே நன்கு ஊறிவிடும்.
வெங்காயம் வதங்கியதும் பிழிந்து வைத்துள்ள அவலை சேர்த்து தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள், துருவிய தேங்காய் அரை கப் சேர்த்து கிளறி இறக்கி கை பொறுக்கும் சூட்டில் கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் இரண்டு நிமிடம் வைத்து எடுக்க சுவையான சத்தான அவல் பிடி கொழுக்கட்டை ரெடி. இதனை தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
கெட்டி அவல், சிவப்பு அவல் என எதிலும் செய்யலாம்.