முந்திரி பருப்பு பஜ்ஜி செய்வது எப்படி?

முந்திரி பருப்பு பஜ்ஜி செய்வது எப்படி?

தேவையானவை :

முந்திரி பருப்பு - 200 கிராம்

கடலை மாவு - 1கப்

அரிசி மாவு - 1/4 கப்

கெட்டியான நெய் - 4 மேஜை கரண்டி

மிளகாய் வற்றல் - 5

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

பெருங்காயம் - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

செய்முறை :

முதலில் உப்பு, மிளகாய், பெருங்காயம் இவற்றை சிறிது தண்ணீர் விட்டு அம்மியில் நன்கு அரைத்து கொள்ளவும்.

ஒரு அகலமான தட்டில் அரிசி மாவை எடுத்து அதில் நெய் விழுதை போட்டு நுரை வரும் பக்குவத்தில் தேய்த்து கொள்ளவும். அத்துடன் மிளகாய் விழுது, கடலை மாவு இவற்றை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி விரவி பஜ்ஜி மாவு தயாரித்து கொள்ளவும்.

முந்திரி பருப்பில் சிறிது உப்பு நீர் தெளித்து பிசிறி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்த உடன் முந்திரி பருப்பை மாவில் தோய்த்து ஒரு தடவைக்கு நாலைந்து வீதம் போட்டு பொன்னிறமாக பொரித்து மாலையில் டீ யுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

காரம் குறைவாக போட்டு செய்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com