ரெசிபி கார்னர்
தேங்காய் வடை செய்வது எப்படி?

தேவையானவை :
பச்சரிசி - ஒரு கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
இஞ்சி துருவல் - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
பச்சரிசியை நீரில் ஊற வைத்து, நன்கு ஊறியதும், அதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அடை மாவு போல் அரைக்கவும்.
பொடியாய் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி துருவலை மாவில் கலந்து பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான மொறு மொறு தேங்காய் வடை ரெடி.