சுவையான தேங்காய் லட்டு செய்வது எப்படி?
தேவை :
பசும் பால் - 1/4 கப்
மில்க் பவுடர் - 2 கப்
சர்க்கரை - 1/4 கப்
ட்ரை தேங்காய் பொடி - 1/2 கப்
முந்திரி, ஏலக்காய் தூள் - தேவையான அளவு
நெய் - 2 ஸ்பூன்.
செய்யும் முறை :
கடாயில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அதே கடாயில் பசும் பால், சர்க்கரை, ஏலக்காய் பொடி, மில்க்பவுடர் சேர்த்து நன்கு கட்டி தட்டாமல் கிளறவும்.
வறுத்த முந்திரி மற்றும் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடாயில் ஒட்டாத அளவு கிளறவும். நன்றாக திரண்டு வரும் வரை கிளறி லேசான சூட்டில் நெய் தடவி பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை ட்ரை தேங்காய் பொடியில் உருட்டி எடுத்தால் சுவையான தேங்காய் லட்டு ரெடி.
பண்டிகை காலங்கள் என வந்துவிட்டால் முன்பெல்லாம் வீடுகளில் நாம் குடும்பத்தினருடன் சேர்ந்து அந்த பண்டிகை நாட்களில் நமக்கு பிடித்த இனிப்பு மற்றும் கார பலகாரங்களை செய்து இனிப்பு சாப்பிட்டு அந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம்.