ருசியான Vegetable Tikka செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
பூண்டு 5பல்
பெரியவெங்காயம் 4 (1கப்)
தக்காளி 3 (1கப்)
வரமிளகாய் 8 to 10
உப்பு சிறிது
தண்ணீர் தேவையான அளவு
வினிகர் 1 tablespoon
சோயா சாஸ் 1 tablespoon
முட்டைகோஸ் துருவியது 1 கப்
கேரட் துருவியது 1கப்
குடைமிளகாய் துருவியது 1கப்
பச்சைமிளகாய் 3
மிளகாய்துாள் 1டிஸ்பூன்
பிளாக் பெப்பர்துாள் 1/4 டிஸ்பூன்
மைதா மாவு 1 டிஸ்பூன்
கோதுமை மாவு 2டிஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
சட்னி செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு 5பல், நறுக்கிய பெரியவெங்காயம் 1கப், தக்காளி நறுக்கியது 1கப் வரமிளகாய் அதில்போட்டு வதக்கவும், பின்னர் உப்பு போட்டு தண்ணிர் வற்றியதும் அதில் வினிகர் 1 டேபில்ஸ்பூன், சோயாசாஸ் 1 டேபில்ஸ்பூனும் உற்றி கிளறி ஆறியதும் அரைக்கவும்.
டிக்கா செய்வதற்கு :
முட்டை கோஸ் துருவியது 1கப், கேரட் துருவியது 1கப், குடைமிளகாய் துருவியது 1 கப், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது.. இதை பாத்திரத்தில் போட்டு 1 டிஸ்பூன் மிளகுத்தூள், 1/4 டிஸ்பூன் மைதாமாவு, 2 டிஸ்பூன் கோதுமை மாவு, 2 டிஸ்பூன் உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் உற்றி சப்பாத்தி மாவு போல் கையில் ஒட்டாமல் (கையில் ஒட்டாமல் இருக்க சிறிது எண்ணெய் தடவி) பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
ஒரு தட்டில் எண்ணெய் தடவி உருண்டைகளை வைக்கவும். பின்பு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் உற்றி தண்ணீர் கொதித்ததும் அதில் நாம் தட்டில் வைத்துள்ள உருண்டைகளை மூடி15 நிமிடம் ஆவியில் வேகவைக்கவும். பின்பு எடுத்து பரிமாறவும்.
சுவையான வெஜிடபுள் டிக்கா ரெடி.
-லலிதாம்பிகை