முருங்கை-உருளை பொரியல்!

முருங்கை-உருளை பொரியல்!
Published on

தேவையானவை :

முருங்கைக்காய் - 2

உருளைக்கிழங்கு - 2

பெரிய தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்றரை டீஸ்பூன்

வெங்காயம் - 2

தேங்காய் துருவல் - கால் கப்

எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

இரண்டு இணுக்கு - கறிவேப்பிலை

கொத்தமல்லிதழை - 2 செடி அளவு

பெரிய நெல்லிக்காய் அளவு புளியை கால் கப் நீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டிய கரைசல்

தேவையான அளவு மஞ்சள் தூள், உப்புத்தூள்

2 டீஸ்பூன் கறி பவுடர் (வேண்டும் அளவு தனியா, சிவப்பு மிளகாய், மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு சிவக்க வறுத்துப் பொடித்தது)

செய்முறை:

முருங்கைக்காயை மூன்று அங்குலம் சைஸ்ஸுக்கு வெட்டவும். உருளை கிழங்கை தோல் சீவி கொஞ்சம் பெரிய துண்டுகளா நறுக்கவும். தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய்களை நீள வாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி, பின் தக்காளி சேர்க்கவும். அனைத்தும் ஒன்று சேர்ந்து மிருதுவானதும் முருங்கைக்காய், உருளை கிழங்கை போடவும்.

பிரட்டி விட்டு ஒரு நிமிடம் ஆனதும் உப்பு, மஞ்சள்தூள், கறி பவுடர் சேர்த்து கிளறவும். அதன்பின் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, மீடியம் தீயில் காய்களை வேக விடவும். பிறகு தேங்காய் பூ சேர்த்து கிண்டவும். புளிக் கரைசலை சேர்த்து, மேலே கொத்தமல்லி கறிவேப்பிலை இலைகளை கிள்ளி தூவவும். தண்ணீர் பசை இல்லாதவாறு ட்ரையாகி வந்ததும் இறக்கி விடவும்.

சுவை மிக்க முருங்கை-உருளை பொரியல் தயார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com