ஆரோக்கியமான நெல்லிக்காய் ஜூஸ் செய்வது எப்படி

ஆரோக்கியமான நெல்லிக்காய் ஜூஸ் செய்வது எப்படி

தேவையானவை :

நெல்லிக்காய் - 1/2கிலோ

வெல்லம் - 1/2கிலோ

சுக்கு தூள் - 2 ஸ்பூன்

ஏலக்காய் தூள் - 1ஸ்பூன்

செய்முறை :

முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி இட்லி பாத்திரத்தில் வைத்து 3 நிமிடம் ஆவியில் வேகவைத்து ஆறவைத்து கொட்டையை நீக்கி விட்டு மிக்ஸியில் தண்ணீர் விடாமல் நன்கு அரைத்து கொள்ளவும்.

வெல்லத்தை 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து கரைத்து வடிகட்டவும். வெல்ல கரைசலில் நெல்லிக்காய் விழுதை போட்டு நன்கு கலந்து அடுப்பில் வைத்து கிளறி விடவும். தண்ணீர் அடங்கும் வரை மூடி வைக்கவும். இல்லை என்றால் வேகமாக துளிகள் கொதித்து நம் மேலே பட்டு விடும்.

பின்னர் சுருண்டு வரும் வரை கிளறி கொடுக்கவும். பிறகு சுக்கு தூள், ஏலக்காய் தூள் போட்டு கிளறி விடவும். சுருண்டு வெந்ததும் இறக்கி மூடி வைத்து ஆறிய பின் காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.

மாலையில் பிரட் கூட தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். உடலுக்கு ஹெல்த்தாகவும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com