Steam & Cooking Contest
ரெசிபி கார்னர்
பன்னீர் கோக்கனட் மில்க் பால்ஸ்!
தேவையான பொருட்கள் :
பச்சரிசி மாவு- ஒரு கப்
தண்ணீர்- ஒரு கப்
உப்பு தேவையானது
எண்ணெய் சிறிதளவு
தேங்காய் பால் 1 கப்
பனீர் துண்டுகள் 10
ஏலக்காய் 4
சர்க்கரை 50 கிராம்
பாதாம் அலங்கரிக்க
செய்முறை :
1. நீருடன் உப்பு எண்ணெய் சேர்த்து கொதிக்க விட்டு அரிசி மாவு போட்டு கட்டி இன்றி கிளறவும்.
2.மாவு சூடு ஆறியவுடன் சீடை போல உருட்டி பத்து நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
3. சர்க்கரையுடன் கால் கப் நீரூற்றி சூடாக்கி கொதி வந்தவுடன் பன்னீர் துண்டுகள் மற்றும் ஆவியில் வேகவைத்து எடுத்த சீடைகளை போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
4. சூடு ஆறிய பின் தேங்காய் பால் விட்டு பாதாம் துண்டுகள் மற்றும் குங்குமப்பூ கொண்டு அலங்கரிக்கவும்.
-M. காயத்ரி அன்னபூரணி