ரெசிபி கார்னர்
பொட்டுக்கடலை அல்வா செய்வது எப்படி?
தேவையானவை :
பொட்டுக்கடலை - 1கப்
தேங்காய் பால் - 1கப்
முந்திரி பருப்பு - 5
பாதாம் பருப்பு - 5
வெல்லம் - 1கப்
நெய் - 2ஸ்பூன்
செய்முறை :
பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுத்து கொள்ளவும். பின்னர் ஆறவைத்து மிக்ஸியில் மாவாக திரித்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை ஏற்றி 1/2 கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். இனி வடிகட்டிய வெல்ல தண்ணீரை வாணலியில் விட்டு அத்துடன் தேங்காய் பால் சேர்த்து, திரித்து வைத்த மாவைக் கொட்டி நன்றாக கலந்து கொண்டு அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் மாவு வேகும் வரை கிண்டிக் கொண்டே இருக்கவும்.
இறுதியில் நெய் கலந்து கிண்டி இறங்கவும். ஆறிய பின் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.