பாரம்பரிய ஸ்வீட் : கருப்பட்டி வட்டிலப்பம் செய்வது எப்படி

பாரம்பரிய ஸ்வீட் : கருப்பட்டி வட்டிலப்பம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

கருப்பட்டி - 250 கிராம்

1 தேங்காய் பால் (முதல் பால் மட்டும்) - 350 மில்லி

கோழிமுட்டை - 7

ஏலக்காய் தூள் - 1ஸ்பூன்

உப்பு  - 1சிட்டிகை

செய்முறை :

முதலில் கருப்பட்டியை சீவி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் பாலை ஊற்றி அதில் சீவிய கருப்பட்டியை போட்டு நன்கு கரைத்துகொள்ளவும். 

தனியாக ஒரு பாத்திரத்தில் முட்டையை அடித்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி கொள்ளவும். பின் இந்த கலவையை தேங்காய்பால் கருப்பட்டி கவலையோடு சேர்த்து நன்கு கலந்து விடவும். எல்லாம் ஒன்று சேர்ந்து கலந்த பிறகு ஏலக்காய் தூள் போட்டு ஒரு சிட்டிகை உப்பு போட்டு நன்கு கலந்து விடவும். இந்த கலவையை சல்லடையில் அரித்து கொள்ளவும்.

பின்னர் சிறிய கிண்ணங்களில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் உள்ள இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைத்து கொள்ளவும். இது வெந்து வர 40 நிமிடம் வரை ஆகும். வெந்து சிறிது ஆறிய பிறகு வேறு தட்டில் கமத்தி தட்டி கொள்ளவும். கருப்பட்டி தேங்காய் பாலுடன் சேர்ந்து மணத்துடன் அருமையான ஸ்வீட் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com