கியா  கோஃப்தா!

கியா கோஃப்தா!

தேவையான பொருட்கள்:

  • சுரைக்காய் துருவியது -2 கப்

  • நறுக்கிய வெங்காயம் - 1 கப்

  • கடலை மாவு - 2 கப்

  • தக்காளி - 1 கப்

  • மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - தேவைக்கேற்ப

  • எண்ணெய் - தேவையான அளவு

  • தனியா பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

  • மஞ்சத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் சுரைக்காயின் தோல் நீக்கி காரட் துருவலில் துருவி வைத்து கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தில் துருவிய சுரைக்காயை போட்டு அத்துடன் கடலை மாவை கலந்து ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும் .

*அதனை சிறு சிறு உருண்டையாய் எடுத்து போண்டா அல்லது வடை போல் தட்டி எண்ணையில் போட்டு எடுத்து தனியாக வைக்கவும்

*பின்னர் வேறு ஒரு கடாயில் இரெண்டு கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்

*பின்னர் தக்காளியும் போட்டு நன்கு வதக்கி அதில் மஞ்சத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் ஒரு டேபிள் ஸ்பூன் தனியா ஒரு டேபிள் ஸ்பூன் போட்டு வதக்கி கொள்ளவும்

*அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒரு டம்பளர் நீர் விட்டு கொதிக்கவைக்கவும்.

*பின்னர் தயாரித்து வைத்துள்ள வடை அல்லது போண்டவை மேலும் கொதிக்கவைக்கவும்

*நன்கு கொதித்து மாநிறமானவுடன் இறக்கி வைத்து கொத்தமல்லி இலை போட்டு விடவும்.

*சப்பாத்தி மற்றும் புரிக்கு இதை தொட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com