மினி பூந்தி லட்டு!

மினி பூந்தி லட்டு
மினி பூந்தி லட்டு

தேவையான பொருட்கள்:

1.கடலை மாவு – 2 கப்

2.நெய் – 1 டேபிள் ஸ்பூன்

3.உலர்ந்த திராச்சை -10

4.முந்திரி – 10

5.கிராம்பு – 3

6.எண்ணெய் – தேவையான அளவு

7.சர்க்கரை – 1 கப்

8.ஏலக்காய் தூள் – சிறிதளவு

செய்முறை:

1.முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவினை எடுத்து கொள்ளவும்.அதனுடன் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

2.பின்னர் வாணலியில் நெய் ஊற்றி திராட்சை, முந்திரி மற்றும் கிராம்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

3. ஒரு பாத்திரத்தில் சக்கரை சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவைத்து சர்க்கரை பாகினை தயார் செய்துகொள்ளவும்.

4.சக்கரை பாகு தயாராகும் வேளையில், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். எண்ணெய் கொதிக்கும்போது கலந்து வைத்த மாவினை பூந்தி கரண்டி (ஜல்லி) மீது மாவை தேய்த்து எண்ணையில் போட்டு 30 நொடிகள் விட்டால் பூந்தி தயாராகிவிடும்.

5.இவ்வாறாக மொத்த மாவினையும் பூந்தி கரண்டி மூலம் ஊற்றி பூந்தியாக பொரித்து எடுக்கவும். பிறகு சக்கரை பாகினை அடுப்பில் இருந்து இறக்கி சூடு குறையும் முன் அனைத்து பூந்திகளையும் அதில் கொட்டவேண்டும். மேலும் ஏற்கனவே பொரித்த திராச்சை முந்திரி மற்றும் கிராம்பு ஆகியவற்றை அதில் கொட்டி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

6.பிறகு அதனை கையில் எண்ணெய் தடவி சமமான அளவில் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வேறொரு தட்டில் வைத்து ஆறவைக்க வேண்டும். ஆறியதும் சுவையான லட்டு தயார்.

7.வண்ணம் தேவைப்பட்டால் கரைத்த மாவை 3 பங்காக பிரித்து நமக்கு விருப்பமான (ஃ புட் ஜெல்) வெனிலா எஸென்ஸ் சில துளிகள் சேர்த்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com