பாப்படி சாட்
பாப்படி சாட்

பாப்படி சாட் - வட இந்திய ஸ்பெஷல்!

தேவையான பொருட்கள்:

 • சுட்ட அப்பளம் 3 (மசாலா பாப்பட்)

 • தயிர் 200 gm

 • பூண்டு 3 பற்கள்

 • சீரகம் 1 ஸ்பூன்

 • வரமிளகாய் 2

 • கடலைப்பருப்பு,

 • உளுந்து 1 ஸ்பூன்

 • பெருங்காயம் சிறிதளவு

 • மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

 • மிளகாய் பொடி 1/5 டீஸ்பூன்,

 • சீரக பொடி ஒரு ஸ்பூன்

 • தனியா பொடி ஒரு ஸ்பூன்

 • கரம் மசாலா ஒரு ஸ்பூன்

செய்முறை:

கடாயில், நெய் விட்டு 2 பூண்டு தட்டி போட்டு வதக்கி, சீரகம், பெருங்காயம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் 2 தாளித்து,

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன், மிளகாய் பொடி ஒன்னரை டீஸ்பூன், சீரக பொடி, தனியா பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்து தாளித்து,

தயிரில், 100ml தண்ணீர் சேர்த்து, கரைத்து, கடாயில் ஊற்றி, கை விடாமல் கலக்கவும். ஒரு கொதி வந்ததும், உப்பு, சுட்ட அப்பளம் ஒடித்து , ஒரு ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கொதிக்க விடவும்.

அப்பளம் சேர்த்து கொதித்து சப்ஜி பதத்திற்கு வந்ததும், இறக்கி விடவும்.

இதற்கு மசாலா பாப்பட் அப்பளம் தான் நன்றாக இருக்கும். சுட்ட அப்பளம் தான் பெஸ்ட்.

மசாலா பாப்பட்
மசாலா பாப்பட்

நெய் வேண்டாதோர், நீங்கள் உபயோகிக்கும் சமையல் எண்ணெய்யையும் உபயோகப் படுத்தலாம்.

மேலே அலங்கரிக்க ஓமப்பொடி, காராபூந்தி, மாதுளை என பயன்படுத்தினால் பார்க்க கல்ர்புல்லாக இருக்கும்.

இதை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். கடைகளில் வாங்கும் சாட் அயிட்டங்கள் போலவே சுவையாக இருக்கும். சாட் பிரியர்கள் உங்கள் வீட்டில் முயன்று பாருங்கள் இது அருமையானதொரு டிஷ்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com