
தேவை:
முளைகட்டிய பாசிப்பயிறு - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முளைகட்டிய பாசிப்பயிறை மிக்சியில் போட்டு கொரகொர வென்று அரைத்து கொள்ளவும். அரைத்த பாசிப்பயிறில் வெங்காயம், மிளகு தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை உருண்டையாக செய்து வட்டமாக கட்லட் வடிவில் தட்டி , தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, தட்டி வைத்த கட்லெட்டுகளை போட்டு வெந்ததும திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும் .
சத்தான முளைகட்டிய பாசிப்பயிறு கட்லெட் ரெடி.