ஸ்ட்ராபெர்ரி பர்ஃபி
ஸ்ட்ராபெர்ரி பர்ஃபி

ஸ்ட்ராபெர்ரி பர்ஃபி - தீபாவளி இனிப்புகள்!

தேவையான பொருட்கள்:

1.பால் பவுடர் - 21/2 கப்

2.சீனி - 1/2 கப்

3.பால் - 3/4 கப்

4.நெய் - 1/4 கப்

5.ஏலக்காய்தூள் - 1/4 டீஸ்பூன்

6.பிஸ்தா,முந்திரி - தேவையான அளவு

7.ஸ்ட்ராபெர்ரி பழம் 5 (அல்லது )ஃபிளேவர் - 1 டீஸ்பூன்

செய்முறை:

1.அடிகனமான பாத்திரத்தில் பால், நெய் சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

2.பின்னர் பால்பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்.

3.நன்கு ஒன்றுசேர்ந்த பின் சீனி சேர்த்து மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.

4. ஸ்ட்ராபெர்ரி கூழ் அல்லது ஃபிளேவர் சேர்த்து 10 - 15 நிமிடங்கள் கிளறிய பின் மிருதுவான பதம் ( சப்பாத்தி மாவு) வந்தபின் இறக்கவும்.

5.பின்னர் நெய் தடவிய தட்டில் சேர்த்து சமன்செய்யவும்.

6.பிஸ்தா, முந்திரி சிறியதாக நறுக்கி மேலே தூவிவிடவும்.

7.2 மணிநேரம் மூடி அப்படியே வைக்கவும்.

8. பின்னர் நம் விருப்பத்திற்கேற்ப வில்லைகளாக்கி பரிமாறவும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com