வாழைக்காய் சுக்கா வறுவல் ஒரு முறை செஞ்சு பாருங்க! 

Banana Sukkah Roast.
Banana Sukkah Roast.

ன்று உங்கள் வீட்டில் சமையல் செய்ய போர் அடிக்கிறதா? பிரிட்ஜில் தயிர் இருக்கிறது அதை வைத்து தயிர் சாதம் செய்து விடலாம் என நினைக்கிறீர்களா? அந்தத் தயிருக்கு எப்பவும் போல ஊறுகாய் தானே சைட் டிஷ்? மாற்றாக வாழக்காய் சுக்கா வறுவல் ஒரு முறை செஞ்சு பாருங்க. இது தயிர் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். 

முக்கியமாக இந்த வறுவலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பிச் சாப்பிடுவார்கள். இதற்கு தேவையான பொருட்கள்,

பெரிய வாழக்காய் -  3

பச்சை மிளகாய் -2

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்

கரம் மசாலா - 2 ஸ்பூன்

மல்லித்தூள் - 1 ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன் 

துருவிய இஞ்சி - 1 ஸ்பூன் 

 உப்பு - தேவையான அளவு 

பெரிய தக்காளி - 1

துருவிய தேங்காய் - ½ கப்

சோம்பு - 2 ஸ்பூன்

முதலில் மிக்ஸி ஜாரில் சோம்பு, தேங்காய் துருவல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும், சிறிது மஞ்சள் தூள் உப்பு சேர்க்க வேண்டும்.

அதில் நறுக்கிய வாழக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு வேக வைக்கவும். வாழக்காய் நன்றாக வெந்ததும் நிறை வடிகட்டி விட்டு அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். 

பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். அதில் துருவிய இஞ்சி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். அதன் பின்னர் வேகவைத்த வாழக்காய் துண்டுகளைச் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். 

பின்னர் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை அதில் சேர்த்து, நன்றாக கிளறி, மெல்லிய தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். அவ்வளவுதான் சுவையான வாழக்காய் சுக்கா வறுவல் தயார். தற்போது தயிர் சாதத்துடன் இதை வைத்து சாப்பிடுங்கள் சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com