வரகு பெசரட்!

வரகு பெசரட்!

தேவையானவை:

பாசிப்பயறு -1கப், வரகரிசி _1/4கப், இஞ்சி -சிறியது, மிளகு,சீரகம்_தலா 1டீஸ்பூன், வெங்காயம் _ஒன்று, உப்பு, ந.எண்ணெய் தேவைக்கு.

செய்முறை:

பாசிப்பயறு ஊற விட்டு பின் முளைகட்டவும்,வரகரிசியை ஒரு மணி நேரம் ஊற விட்டு பின் நீரை வடிகட்டவும். முளைகட்டிய பாசிப்பயறு, வரகரிசி, இஞ்சி, சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தோசை மாவு பதத்தில் இருக்க‌வேண்டும். பின் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.சற்று நேரம் வைத்திருந்து தோசைக்கல்லில் சற்று கனமான தோசையாக பரப்பவும். பின் அரிந்த வெங்காயம் தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்து ரோஸ்ட் ஆனதும் எடுக்கவும். கார சட்னி, தக்காளி சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

விருப்பமெனில்  நடுவில் உப்புமா செய்த கலவையையோ, கிழங்கு மசாலா வையோவைத்து மூடி போட்டு பின் மடித்து எடுத்து பரிமாறவும்.நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த வரகு பெசரட் ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

மூங்கிலரிசி ஹல்வா

தேவையானவை:

மூங்கிலரிசி -1/2கப், நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் -1/4கப், தேங்காய் துருவல் _1/4 கப் முந்திரிப் பருப்பு -3திராட்சை-5, ஏலக்காய்த்தூள் -1/2டீஸ்பூன்,நெய்-1/2 கப்.

செய்முறை:

முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். நாட்டு சர்க்கரை எனில் அப்படியே எடுத்துக் கொள்ளலாம். வெல்லமாக இருந்தால் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளலாம். மூங்கிலரிசியை சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊற வைத்து  நன்கு அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சவும்.இந்த வெல்லம் பாகுடன் அரைத்த மூங்கிலரிசி,தே துருவல் சேர்த்து கை விடாமல் கிளறவும். நன்றாக கொதி வந்ததும் நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். அதனுடன் முந்திரி திராட்சையை சேர்த்து நன்கு கிளறி விட்டு வெந்து வரும் மணம் வரும் வரை வேக வைக்கவும். நல்ல மணத்துடன் நிறம் மாறி திரண்டு ஹல்வா பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாக வந்ததும் இறக்கவும். சுவையான இந்த மூங்கிலரிசி ஹல்வா அனைவருக்கும் ஏற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com