வெஜ் கடாய்!

வெஜ் கடாய்!

தேவையான பொருட்கள்:

  • உருளைக் கிழங்கு : 1/4 கிலோ

  • கேரட்:200 கிராம்

  • காளிஃப்ளவர்

  • தக்காளி:3

  • குடைமிளகாய்:2

  • வெங்காயம்:3

  • பச்சைப் பட்டாணி:100 கிராம்

  • நெய்:2 ஸ்பூன்

  • நல்லெண்ணெய்: 2 ஸ்பூன்

  • சீரகம் :1/2ஸ்பூன்

  • மஞ்சள் தூள்:1/4 ஸ்பூன்

  • சீரகத்தூள்: 1 ஸ்பூன்

  • மல்லி பொடி:1 ஸ்பூன்

  • மிளகாய் பொடி :2 ஸ்பூன்

  • கரம்மசாலா பொடி:1 ஸ்பூன்

  • மிளகு பொடி :1/2ஸ்பூன்

  • தேவையான அளவு உப்பு

  • அரைத்து வைத்த தேங்காய் :1 கப்

  • கொத்தமல்லி தழை:அரை கட்டு

  • இஞ்சு பூண்டு விழுது : 2 ஸ்பூன்

செய்முறை:

  • உருளைக் கிழங்கு, காளிஃப்ளவர் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கேரட், ஆகியவற்றை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  • பச்சைப் பட்டாணியை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  • ஒரு கடாயில், ஒரு ஸ்பூன் நெய், நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் தாளிக்கவும். சீரகம் பொரிந்த உடன் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.

  • நன்றாக வதங்கிய உடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும். இத்துடன் பச்சைப் பட்டாணியை சேர்க்கவும். இதன்பின் சீரகத்தூள், மஞ்சள் தூள், உள்ளிட்ட அனைத்து பொடிகளையும் கொடுத்துள்ள அளவுப் போட்டு நன்றாக வதக்கவும்.

  • இந்த கலவை நன்கு வதங்கிய பின், பின்னர் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதி வந்தபின் அரைத்து வைத்த தேங்காயை ஊற்றி கடாயை மூடிபோட்டு மிதமான தீயில் வேகவிடவும்.

  • 10 நிமிடம் கழித்து காய்கள் நன்கு வெந்து கிரேவி பதத்திற்கு வந்திருக்கும். அப்போது கொத்தமல்லி தழை சேர்த்து ஸ்டவ்வை நிறுத்திவிடவும். சுவையான கடாய் வெஜிடபிள் தயார்.

இந்த அருமையான கடாய் வெஜிடபிள் சப்பாத்தி, பூரி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com