வெண்டைக்காய் ஃபிரை
வெண்டைக்காய் ஃபிரை

வெண்டைக்காய் ஃபிரை !

-சௌமியா சுப்ரமணியன்

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 100 கிராம்

நிலக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

தனியா - 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 2

எள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

சாட் மசாலா -  1/4 டீஸ்பூன்

ஜீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்

கடலை மாவு - 1/4 கப்

அரிசி மாவு - 1/4 கப்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை :

வெண்டைக்காய்களை நீளவாக்கில் நறுக்கி சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி விட்டு, 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

நிலக்கடலையை வறுத்து, பாதி வறுபட்டவுடன், கடலைப்பருப்பு, தனியா, சிவப்பு மிளகாய், எள் சேர்த்து மீண்டும் நன்றாக வறுத்து , ஆறியபின் மிக்சியில் நைஸாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மிளகாய்தூள், கரம் மசாலா, சாட் மசாலா, ஜீரகத்தூள், கடலை மாவு, அரிசி மாவு , எலுமிச்சை சாறு,

அரைத்த நிலக்கடலை தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். 

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிதமான தணலில் வைத்து, சிறிது சிறிதாக வெண்டைக்காய்களை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இப்போது சுவையான, மொறு மொறுப்பான வெண்டைக்காய் ஃபிரை ரெடி. அனைத்து வயதினரும் ஆர்வமுடன் விரும்பிச் சாப்பிடுவர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com