‘கோவிந்தா... கோவிந்தா’ என எழுதினாலே ஏழுமலையானை விஐபி தரிசனத்தில் தரிசிக்கலாம்!

திருப்பதி ஏழுமலையான்
திருப்பதி ஏழுமலையான்

திருமலை திருப்பதி ஏழுமலையானை விஐபி தரிசனத்தில் தரிசிக்க, திருமலை தேவஸ்தானம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருப்பதியில் ஒரு நாளைக்கு சராசரியாக லட்சக்கணக்கில் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்கின்றனர். பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானை தரிசித்தால் செல்வம் சேரும் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு ஆலோசனைக் கூட்டம் திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுடன் பேசிய அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர ரெட்டி, ‘‘மாறிவரும் கால சூழ்நிலையில் சக மனிதரை மதிப்பது, இறை பக்தியுடன் செயல்படுவது போன்ற அவசியமான செயல்களில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இளைஞர்களிடம் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த விரும்பத்தகாத மாற்றங்களுக்கு தீர்வு காணும் வகையில் சனாதன தர்மம் பற்றி அவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு கோடி முறை ‘கோவிந்தா’ நாமம் எழுதி எடுத்து வரும் நிலையில் அந்த நபரின் குடும்பத்துக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி அளிக்கப்படும்.

10,01,116 முறை அதாவது, ஒரு லட்சத்து ஆயிரத்து 116 முறை ‘கோவிந்தா’ நாமம் எழுதி எடுத்து வந்தால் அந்த நபருக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். இந்த ஆண்டில் இரண்டு முறை பிரம்மோத்ஸவங்கள் நடைபெற உள்ளன. பிரம்மோத்ஸவங்களை சிறப்பான முறையில் பாதுகாப்புடன் நடத்தத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம்” என அவர் தெரிவித்தார். ஆகவே, பக்தர்கள் ‘கோவிந்தா’ நாமத்தை எழுதி காண்பித்தாலே போதும், நீங்கள் திருமலை திருப்பதி ஏழுமலையானை விஐபி-யை போல தரிசனம் செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com