எக்காரணம் கொண்டும் தானமாகக் கொடுக்கவோ வாங்கவோ கூடாத பொருட்கள்!
சாஸ்திரப்படி சில பொருட்களை இலவசமாக வாங்கவோ, கொடுக்கவோ கூடாது என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதனால்தான், ‘பிறந்த வீட்டில் இருந்து எண்ணெய் எடுத்துக் கொண்டு வரக்கூடாது’ என்றெல்லாம் சொல்லிவைத்துள்ளனர். ஏன் அப்படிச் சொல்கிறார்கள், அதனால் என்ன நடக்கும், எந்தெந்தப் பொருட்களை எல்லாம் இலவசமாக வாங்கக் கூடாது என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
உப்பு: வீட்டில் உப்பு தீர்ந்துபோகும்போதெல்லாம், பலர் அதை அக்கம் பக்கத்திலோ அல்லது உறவினர்களிடமோ கேட்கிறார்கள். உங்கள் வீட்டில் உப்பு தீர்ந்து விட்டால் தவறுதலாகக் கூட அதை யாரிடமிருந்தும் இலவசமாக வாங்கவோ கொடுக்கவோ கூடாது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் உப்புக்கும் சனி பகவானுக்கும் உள்ள தொடர்பு விவரிக்கப்பட்டுள்ளது. உப்பை தானம் செய்தால் சனி பகவான் கோபம் கொள்வார். அதுமட்டுமின்றி, பணமில்லாமல் உப்பு கொடுப்பதால் நோய்கள், கடன்கள் ஏற்படுமாம்.
கர்சீப்: வாஸ்து சாஸ்திரப்படி இலவசமாக ஒருவரிடமிருந்து கர்சீப்பை வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. இப்படிச் செய்வதால் வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகரித்து குடும்பத்தில் பலவிதமான பிரச்னைகள் தோன்றும். மேலும், யாருக்கும் கர்சீப்பை பரிசாகவும் வழங்கக்கூடாது. இப்படிச் செய்வதன் மூலம் அந்த உறவில் இடைவெளி அதிகரிப்பது நிச்சயம்.
தீப்பெட்டி: சாஸ்திரப்படி தீப்பெட்டியை யாரிடமும் பணம் இல்லாமல் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. ஏனெனில் தீக்குச்சிகள் நெருப்புடன் நேரடியாகத் தொடர்புடையவை. இப்படிச் செய்வதால், உறவினர்களிடையே கோபம், பிரச்னைகள் அதிகரிக்கும். இதனால் வீட்டின் அமைதி கெடும்.
தயிர்: தயிரை பணமில்லாமல் யாரிடமும் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது என்கிறது சாஸ்திரம். பெரும்பாலும் தயிர் தயாரிக்க பக்கத்து வீட்டுக்காரரிடம் உறைமோர் வாங்கி வீட்டில் தயிர் தயாரிப்போம். இப்படிச் செய்வதன் மூலம், வீட்டில் பதற்றம் மற்றும் அமைதியின்மை ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும், பண விரயமும் ஏற்படுமாம். அதனால்தான் தவறுதலாகக் கூட காசு இல்லாமல் தயிரை வாங்கவோ, கொடுக்கவோ கூடாது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை இலவசமாக வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. இதைத் தவிர்க்க முடியவில்லை என்றால் பெயருக்கு 1 ரூபாய் அல்லது 2 ரூபாய் கொடுத்து கூட இந்தப் பொருட்களை வாங்கலாம். ஆனால், இலவசமாக வாங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர்.