விண்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு பூமி!
ஜப்பான் விண்வெளி ஆய்வாளர்கள் முற்றிலும் புதுமையான கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது நமது சூரிய குடும்பத்திற்குள் இருக்கும் பூமியைப் போலவே உள்ள மற்றொரு கிரகமாகும்.
நெப்டியூன் கிரகத்தின் சுற்றுப்பாதைக்கு சற்று அப்பால் நமது சூரிய மண்டலத்தின் வெளிப்புற பகுதிகளைச் சுற்றியுள்ள பல்வேறு வான் பொருட்கள் கொண்ட ஒரு பகுதி தான் கைபர் பெல்ட். இங்குதான் பூமியைப் போலவே இருக்கும் மற்றொரு கிரகம் இருப்பதாக நம்பப்படுகிறது. சூரியனை சுற்றிக் கொண்டிருக்கும் கிரகங்களைப் போலவே, இந்த கைபர் பெல்ட்டில் உள்ள பொருட்களும் சூரியனைச் சுற்றி வருகிறது.
ஜப்பானிய ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அவர்கள் கண்டுபிடித்த கிரகமானது உண்மையாக இருந்தால், அது பூமியின் அளவைவிட 1.5 முதல் 3 மடங்கு அதிகமாக இருக்கும். இந்த புதிய கண்டுபிடிப்பனது தொலைதூரத்தில் உள்ள ஒன்பதாவது கிரகத்தைப் பற்றிய கேள்வியை நமக்கு எழுப்புகிறது. பிளானட் 9 என அழைக்கப்படும் இந்த கிரகம் நமது சூரிய மண்டலத்தின் வெளிப்புற பகுதியில் இருப்பதாக கருதப்படுகிறது.
வானியலாளர்கள் இந்தப் பிளானட் 9 கிரகம் போலவே, கைபர் பெல்ட்டில் நாம் கண்டுபிடிக்காத, பூமிக்கு மிக நெருக்கமான கிராமமும் இருக்கக்கூடும் எனக் கூறுகின்றனர். ஜப்பானியர்களின் இந்த கண்டுபிடிப்பு நமது சூரிய மண்டலத்தின் வெளிப்பகுதிகளை மேலும் ஆராய்வதற்கும், அதைப் புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டியது அவசியம்.
இதற்கு முன்பாக புளூட்டோ என்ற கிரகமும் இந்த கைபர் பட்டையின் எல்லையிலேயே அமைந்திருந்தது. 1930 இல் கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோ கிரகத்தை, சூரிய குடும்பத்தில் ஒன்றாகவே நாம் கருதி இருந்த நிலையில், அது கைபர் பட்டையில் அமைந்துள்ளது என்பது தெரிந்ததும் சூரிய குடும்பத்தின் எல்லையிலிருந்து விடுவிக்கப்பட்டது.
அதே போலதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பிளானட் 9 கிரகத்தையும் நாம் ஒன்பதாவது கிரகமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் இது சூரிய குடும்பத்தின் எல்லையைத் தாண்டி அமைந்துள்ளது. என ஜப்பான் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.