டிபன் சாப்பிட வழியைக் காட்டுங்க!

ஜோக்ஸ்!
டிபன் சாப்பிட வழியைக் காட்டுங்க!

''கல்யாணத்துக்கு வந்தவர்களுக்கு சந்தனம் காட்டினியா இல்லையா? எதோ முணுமுணுப்பு வருதே?"

''சந்தனம் பன்னீர் எல்லாம் இருக்கட்டும்… லேட் பண்ணாமல் டிபன் சாப்பிட வழி காட்டுன்னு கேக்கறாங்க...''

**********************************

''இவன் என்னை ஏமாத்திட்டான்...''

''வாங்கின  கடனை  அடைக்கலயா?"

''ஓசியில் பொங்கல் வாங்கித் தரேன்னு ஓட்டலுக்கு கூட்டி போகாம கோவில் பிரசாத வரிசையில் நிக்க வச்சிட்டான்.''

**********************************

''நான் கொடுத்த மாத்திரை  வேலை செய்லயா? என்ன சொல்றீங்க?''

''ஆமாம் டாக்டர், எந்த வேலையும் செய்யாம ஷெல்ஃபில் கிடக்கு.''

**********************************

''தலையில் ஏன் விளக்கெண்ணெய் தடவுறாரு?"

''உச்சி  குளிர எதையோ சொல்லப் போகிறாராம்.''

- பம்மல் நாகராஜன்

**********************************

டீச்சர்: பிள்ளையார் ஏன் அம்மா அப்பாவை சுற்றிவந்து மாம்பழத்தைப் பெற்றுக்கொண்டார்?

மாணவன்: உலகத்தைச் சுற்றி வருவதற்குள் மாம்பழம் அழுகிவிடும்ன்னு தான் டீச்சர்.

- எஸ்.ஜெயகாந்தி

**********************************

கணவர்: படகு போன்ற கார்ல வந்து வீட்ல இறங்கணும்னு அடிக்கடி சொல்வியே, பாத்தியா... இன்னிக்கு படகுலேயே வந்து இறங்குறோம்! வெள்ளத்துக்கு நன்றி சொல்லு.

மனைவி: ??????

- எஸ்.ஜெயகாந்தி

**********************************

 ''இன்னும் அவனுக்கு சிறையில் இருக்கிறதா நெனப்பு..''

''என்ன சொல்றான்?"

''சாப்பிட மணி அடிக்க சொல்றான்.''

- பர்வதவர்த்தினி, சென்னை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com