சீர்திருத்தப் பள்ளியில படிச்சவராம்…

சீர்திருத்தப் பள்ளியில படிச்சவராம்…

ஜோக்ஸ்!

ஓவியம்; பிரபுராம்

"சீர்திருத்த திருமணங்கள்னா தலைவருக்கு ரொம்பப் பிடிக்குமாம்!"

‘’ஏன்?’’

"அவரு சீர்திருத்தப் பள்ளியில படிச்சவராம்!"

************************

"அமைச்சரே! ஆராய்ச்சி மணியை யாரோ அடித்தது போல் கனவு கண்டேன்...!"

"உங்கள் கனவு பலித்துவிட்டது மன்னா...! நேற்று, இரவோடு இரவாக யாரோ மணியை சப்தமில்லாமல் அடித்துச் சென்று விட்டனர் மன்னா!"

************************

"டாக்டர் பட்டம் கிடைத்ததுலேர்ந்து தலைவரோட அலப்பறை தாங்க முடியலை போங்க"

"என்னாச்சு?"

"எந்த பிரச்னையா இருந்தாலும் என்னை கன்சல்ட் பண்ணுங்க'ன்னு சொல்றாரே!"

************************

"அவர் டுபாக்கூர் சோதிடர்தான் என்று எப்படி உறுதியாக கூறுகிறீர்?"

"போர் என்றால் மன்னர் ஏன் ரொம்ப நடுங்குகிறார்?'' என்று கேட்டதற்கு, ''மன்னரின் கையில் 'அச்சரேகை' அப்படி அமைந்திருக்கிறது என்று சொன்னாரே!!"

************************

"போலீஸ் ஸ்டேசன்ல ஒவ்வொருத்தர் காலிலும் விழுந்து வணங்கறாரே, யாருங்க அவரு?"

"புது திருடனாம்.. எல்லார்கிட்டேயும் ஆசி வாங்கிட்டுப் போய் தொழில்ல ஈடுபடப்போறானாம்!"

 ************************

"என் மனைவி சரியான புதுமை விரும்பி...! ''

"ரொம்ப மாடர்னா இருப்பாங்களோ...?"

"இல்ல... வாரா வாரம் புதுசு புதுசா மை வாங்கி கண்ணுக்கு இட்டுக்குவா!"

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com