காலம் போடும் கோலங்கள்!

கவிதை!
காலம் போடும் கோலங்கள்!

ம்பூதங்கள் வழி காலத்தச்சன் உருவாக்கிய கோலங்கள் 

ஜாலங்கள் புரிந்திடுமே! 

மழை மேகங்கள் சூழ்ந்து வரையும்

மின்னல் கொடியழகு.

குளிர் காற்று வீசும் குறைகாலையில்

கூம்பி விரியும் இலைகளழகு.

விடியலில் வெண்பனி தூவும்

முன் பனிக்காலமழகு.

நாள் முடிவில் பனி பொழிந்து

இருள் சூழும் பின்பனியுமழகு.

இலை உதிர்த்து தளிர் துளிர்த்து

மலர்மலரும் இளவேனில் கோலமழகு.

காலம் போடும் கோலங்களை

அன்றே ரசித்து காண்பது சிறப்பு!

காலம் போடும் புதிர் கோலங்களை

காலம் கடந்து யாரும் அறிந்திட இயலாது! 

புரிந்திடவும் முடியாது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com