விபரீத விளையாட்டு!

சிறுகதை

விபரீத விளையாட்டு!

ஓவியம்: தமிழ்

ஞ்சல்  கோட்ட கண்காணிப்பாளராக, அந்தத் தலைமை அலுவலகத்துக்கு இன்ஃபெக்ஷன் செய்ய  வந்திருந்தான் வாசு.  பழைய தந்தி பிராஞ்ச் ரூமுக்குள்  நுழைந்தபோது அவன் கண்களும் கொஞ்சம் கலங்கின.

அங்கிருந்த டெய்லி ஷீட் காலண்டர் ஏப்ரல் 1 ம் தேதியைக் காட்டியது. அதைப் பார்த்ததும் இன்னும் அவன் மனசு என்னவோ கனத்தது உண்மை.

இப்போது தந்தி  பிராஞ்ச்  நடைமுறையில் இல்லை. அந்த இடம் ரெக்ரியேஷன் கிளப் ஆக  மாறியிருந்தது.

35 வருடங்கள் முன்பு இந்த ஆபிஸில் தந்தி கிளர்க்காக வேலை பார்த்தபோது,  அந்தச் சோக சம்பவம் நடைபெறும் என்றோ, அதனால், தான்  இந்த ஊரை விட்டு, மாற்றல் வாங்கி, வேறு ஊருக்குப் போக நேரிடும் என்றோ சத்தியமாக நினைக்கவில்லை அவன்.

அவன் நினைவுகள்  பின் நோக்கிச் சென்றன…

சென்னை மூக்கர் நல்ல முத்து தெருவில் தந்தி டிரெய்னிங் 6 மாசம். பக்கத்தில் உள்ள  லாட்ஜ்ல் ரூம் வாசம்.

சென்னை டிரெய்னிங் என்பதால்  டிபுட்டேஷன் கணக்கு. டி ஏ, ஹெச் ஆர்  ஏ, சி சி ஏ  என  கூடுதல்  சம்பளம். கிடைத்தது அப்பாவுக்கு எப்போதும் அனுப்பும் பணத்தை விட அதிகமாகவே அனுப்பினான்.

ஒரு வாரம் காலை 7 மணி முதல்  மதியம் 2 மணி வரை டூட்டி. அந்த வாரம்  டூட்டி முடிந்து பின் சாப்பிட்டு விட்டு நல்ல தூக்கம்.  மாலை 5  மணிக்கு எழுந்து ஒரு குளியல். லைட்  டிபன். பின் ஏதாவது ஒரு சபாவில் நாடகம்.

அடுத்த வாரம் 2 மணி டூட்டி. இரவு 9 மணி வரை. வெளியில் வந்ததும் டிபன் சாப்பிட்டுவிட்டு ஏதாவது ஒரு சினிமா. இப்படி ஜாலியாகத்தான் போனது.

ஒரு வழியாக தந்தி டிரெய்னிங் முடிந்து, தஞ்சாவூர் பிராக்டிகல் டிரெய்னிங் 3 மாதம் முடித்தபின், இதோ  இந்த ஊரில்  போஸ்டிங். தலைமை அலுவலகம். போஸ்ட் மாஸ்டரைப் பார்க்க, கொஞ்சம் பயமாகத்தான்  இருந்தது  பெருத்த உருவம். பெரிய மீசை.

தந்தி பிராஞ்ச் ரோடு ஓரம் முகப்பில் இருந்ததால், பஸ் சத்தம், மற்ற இரைச்சலில் மோர்ஸ் ஒலிகளைக் கவனித்து, தந்தி  வாங்குவது சிரமமாகத்தான் இருந்தது.

கூடவே இருந்த கணேசன்  சார்தான் ஊக்கமூட்டினார்.

"பயப்படாதே… போகப் போகச் சரியாயிடும்."

"ஆமா எங்கே தங்க போறே? நீ லாட்ஜ் எடுத்து தங்க வேண்டாம். நீ இரட்டை தெரு போ. என் நண்பர் நாராயணசாமி ரிடயர்டு பேங்க் கேஷியர் ஹெல்ப் பண்ணுவார். அவர்கிட்ட ரூம் இருக்கு. அட்ரஸ் 34  இரட்டை தெரு.

"ரொம்ப தேங்க்ஸ்  சார்!"

போஸ்டாஃபீஸ் அருகில். சுமார் அரை கிலோமீட்டர் தூரம்தான் அவர் சொன்ன வீடு  இருந்தது. 

மாலை 6 மணி. டூட்டி முடிந்து, அவன்  அந்த வீட்டின் காலிங் பெல் அழுத்தியபோது  ராஜம் மாமி கதவைத் திறந்தாள். 

"யாரப்பா என்ன வேணும்?"

அதற்குள் நாராயணசாமி கொல்லைப்புறத்திலிருந்து வந்தவர், "நம்ம கணேசன் போன் பண்ணி, இந்தப் பையனை பத்தி சொன்னான்."

"வாப்பா உக்காரு."

வாசு, தன்னைப்பற்றி சொன்ன செய்திகளைக் கேட்டுக்கொண்ட ராஜம், “அசப்பில் நம்ம சங்கர் மாதிரி இருக்கான். நமக்கும் துணையாக இருக்கட்டும்" என்று பச்சைக் கொடி காட்டியது நாராயணசாமிக்கு சாதகமாகப் போனது.
நாளடைவில் அவர்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, பக்கத்து வீட்டு  நபர்கள்கூட நட்பு ரீதியான முறையில்  அவனிடம் பழக ஆரம்பித்தார்கள்.

குறிப்பாக ராஜி அக்கா. ராஜி அக்காவுக்கு 22 வயது. அவனுக்கு 20 வயது.

இரண்டு வருடம் முன்பு கல்யாணம். கணவர்  மஸ்கட்டில் வேலை. வரும் அக்டோபரில், தான் பார்த்த கம்பெனி பெங்களூருக்கே  வர இருப்பதாகவும், அப்போது அழைத்துப் போக  இருப்பதால்  இங்கே அம்மா அப்பாவுடன் இருந்து வந்தாள் ராஜி அக்கா. இரண்டு தங்கை தம்பி.

அப்பா புரோகிதம்… சாப்பாட்டுக்குக் கஷ்டமில்லை.

ராஜி அக்கா எப்போதும் சிரித்த முகம். வெரி கியூட். நெளி நெளியான  நீண்ட கூந்தல். அசப்பில் ‘அபூர்வ ராகங்கள்’ ஶ்ரீவித்யா மாதிரி. அறிவாளி. எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளிக்கும் திறமை. மொத்தத்தில் பாரதி கண்ட புதுமைப்பெண்.

ராஜி அக்கா, மாமா மாமி, கணேசன் சார்  எல்லோரும் வாசுவிடம் அப்படி அன்பு செலுத்தியதில், அவன் சொந்த ஊருக்குப் போவதையே  படிப்படியா குறைத்துக் கொண்டான்.

ன்று ஞாயிறு மாலை  4மணி அளவில் எல்லோரும் ராஜம் மாமி செய்த பஜ்ஜியைச் சுவைத்துக்கொண்டே இருந்தபோது, நாராயணசாமி பேச்சை ஆரம்பித்தார்.

"நாளை ஏப்ரல் முதல் தேதி. மதியம் 3 மணிக்குள்  யார் ஏப்ரல் ஃபூல் ஆகி தோத்துப் போறாங்களோ, அவங்க மத்த எல்லோரையும், சினிமாவுக்கு அழைச்சுட்டு போகணும். டீல் ஓக்கேவா! இது ஒரு வேடிக்கை  விளையாட்டு."

"என்ன சின்ன பசங்க விளையாட்டு? நீங்களும் அவங்களோட சேர்ந்துகிட்டு! துளிகூட நல்லாயில்லை."

"மாமி இது சும்மா விளையாட்டுக்குத்தான்…" ராஜிதான் பரிந்து பேசினாள்.

வாசுவுக்கு, மறுநாள் காலை 7 மணி டூட்டி. கிளம்பும்போதே ராஜியும், நானா மாமாவும் அவனை ஏப்ரல் ஃபூல் ஆக்க  முடியாம தோத்துப்போனார்கள். 

வேலை நேரத்தில் ஏகபட்ட தந்திகள். சரியா 2.30 மணிக்குத்தான், வாசுக்கு மற்ற மூவரையும் இந்த விளையாட்டுக்கு உட்படுத்தவில்லை என்ற ஞாபகம் வந்தது.

மூன்று மணிக்குள் கட் ஆஃப் டைம்ன்னு வேறசொல்லி யிருக்கார் நானா மாமா.

முதலில் ராஜி அக்காவை ஏப்ரல் ஃபூல் பண்ணுவோம். பின் மாமா மாமியைப் பார்த்துக்கலாம். உடனே அதைச் செயல்படுத்தினான்.

இளம் கன்று பயமறியாது.  என்ன செய்யப் போகிறோம்? அதன் பின்விளைவு என்னவாக இருக்கும்?  இதையெல்லாம் யோசிக்க நேரம் இல்லை அவனுக்கு.

டூட்டி முடிந்து ரூமுக்கு வந்தபோது, தந்தி பியூன்  தந்தியைக் கொடுத்ததும் ராஜி விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். பெங்களூருக்கு ஆபீஸ் விசயமா வந்த  அவள் கணவன்  மாரடைப்பில் மரணம்  என்று" தந்தியில்  இருந்தது.

ஒரே அழுகை. மாமா, மாமி அவளைச் சமாதானப் படுத்தினார்கள்.

 "ரிலாக்ஸ் ராஜி அக்கா! உங்க வீட்டுகாரருக்கு ஒண்ணும் ஆகலை. நான்தான்  ஒரு பொய்யான  தந்தி எழுதி,  பியூன் மூலம் கொடுத்துவிட்டேன். நீ ஏப்ரல் ஃபூல் ஆயிட்டே."

எங்கிருந்து ராஜம் மாமிக்கு கோபம் வந்ததுண்ணு தெரியல!

வாசுவையும் வீட்டுக்காரரையும் சகட்டு மேனிக்குத் திட்டி தீர்த்துவிட்டாள்.

"நேத்திக்கே சொன்னேன் கேட்டீங்களா? எது விளையாட்டு? இப்படி ஒரு அஞ்சு நிமிசத்தில எல்லோரையும் கண் கலங்க வெச்சுட்ட."

"மாமி தெரியமா தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க" காலில் விழுந்தான் வாசு.

"அரசாங்க வேலையில் இருக்கே… இப்படி பொறுப்பு இல்லாமல் இருக்கே?"

இப்பவும் ராஜி அக்காதான் என் சப்போர்ட்க்கு வந்தாள்.

"விடுங்க மாமி ஏதோ விளையாட்டுத்தனமா செஞ்சுட்டான். நெருப்புன்னு சொன்னா வாய் வெந்திடுமா என்ன?" வழக்கமான புன்சிரிப்புடன் தன் வீட்டுக்குக் கிளம்பினாள்.

வாசு மனது அழுதுகொண்டே இருந்தது. ராஜி அக்கா மனதைப் புண்படுத்தி  விட்டதாகவே புலம்பிக் கொண்டிருந்தான். ராஜம் மாமி சொன்ன மாதிரி இந்தச் செயலை மேல் அதிகாரிக்கு தெரியப்படுத்தினால் தன்  வேலையே போயிடும். தன் மேல் மதிப்பு வைத்திருக்கும் கணேசன் சார் தன்னை  எவ்வளவு கேவலமாக நினைப்பார்?

கலகலப்பாக இருந்த வீடு அதை இழந்து இருந்தது. யாரும் சகஜமாகப் பேசிக்கொள்ளவில்லை. எல்லோரும் இறுக்கமாகவே இருந்தனர் ராஜியைத் தவிர்த்து.

டுத்த வாரம்  ஞாயிறு மாலை  6 மணிக்கு லைப்ரரிக்கு  அவன் கிளம்பிய நேரம், தந்தி பியூன்  எதிர்பட்டான்.

"சார் ராஜலக்ஷ்மி வீடு எது சார்?"

"மொட்டையா ராஜலக்ஷ்மி இரட்டை தெரு என்று வீட்டு இலக்கம் இல்லாமல் வந்துருக்கு சார்".

தந்தி என்றதும் மொத்த பேரும் பதறினார்கள்.

ராஜி அக்கா ராஜம் மாமி வீட்டில் இருந்தாள்

தந்தி வாசகம்  இப்போது நிஜமாகவே!!

ராஜி மயக்கமானாள்.

மாரடைப்பில் மரணம் என்று இருந்தது. தான்  என்ன வாசகம் எழுதி  அன்றைக்கு அனுப்பியிருந்தானோ அதே மாதிரி  வாசகம் இருக்கவே அவன்  உடல் நடுங்கியது. கரி நாக்கு பலித்துவிட்டதே!!

விளையாட்டு இப்போ வினையாகி விட்டதே! தான் மட்டும்தான்  முழுபொறுப்பு. புலம்பினான். 

அன்று எது சரி,  தவறு என்று தீர்மானித்து செயல்பட தைரியம் இல்லாமல் போய் விட்டதே.

வாசு அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல், மறு வாரமே வேறு ஊருக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டான்.

ந்நாள் வரை எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்குச்  சூழ்நிலைக் கைதியாகி  விட்டான்.

"சார்! இரட்டைதெரு 34ம் நம்பர் வீட்டில் நீங்க சொன்ன நபர் இருக்காங்களாம்."

போஸ்ட்மாஸ்டர், வாசுவிடம் வந்து சொன்னபோதுதான் வாசு  பழைய நிலைக்குத்  திரும்பினான்.

ராஜி அக்கா அங்கு இருப்பதே சந்தோசம்தான் என்று நினைத்தான்.

ஜீப்பில் போய் இறங்கியதும் அதே புன்னகையுடன் வரவேற்ற ராஜி அக்காவைப் பார்த்தான்.

‘அவள் ஒரு தொடர்கதை’ சுஜாதா மாதிரி ராஜி அக்கா வாழ்க்கை ஓட்டம்  இருந்துள்ளது என்று  கேள்விப்பட்டான். பழங்களைக் கொடுத்த பிறகு, "நீ கல்யாணம் செஞ்சுக்கிட்டியா? மனைவி எந்த ஊர்? குழந்தைகள் எவ்வளவு?" கேள்வி மேல் கேள்வி.

 35 வருடத்துக்கு முன்பு, எப்படி சுறுசுறுப்போ அதே மாதிரி இன்றும் அவளிடம் காணப்பட்டது.

இது பைத்தியக்காரத்தனமாக தோணும். ஆனால், அதுதான் விதி.

உனக்கு செஞ்ச விளையாட்டு வினை ஆனதால், நான்  இன்னமும் அப்படியேதான் இருக்கேன் ராஜி அக்கா.

I am also sailing in the same boat.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com