உலக கோப்பை கால்பந்து தொடர் ஆட்டங்கள் நடைபெற்ற அரங்குகள்!

உலக கோப்பை கால்பந்து தொடர் ஆட்டங்கள் நடைபெற்ற அரங்குகள்!

அல்பையத் அரங்கம்

தொடக்க விழாவும், முதல் ஆட்டமும் இந்த அரங்கில்தான் நடைபெற்றது. மொத்த இருக்கைகள் 60,000. கூரை திறந்து மூடும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. கத்தார் நாடோடி மக்கள் பயன்படுத்திய கூடாரத்தின் வடிவில் இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லுசைல் அரங்கம்

மொத்தம் 80 ஆயிரம் இருக்கைகளைக் கொண்ட கத்தாரின் மிகப் பெரிய அரங்கமான இதில்தான் பைனல் ஆட்டம் நடைபெற்றது. தோஹாவின் மையப் பகுதியில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அரபு நாடுகளில் பண்டைய காலத்தில் கைவினைக் கலைஞர்கள் உருவாக்கிய கோப்பை வடிவில் இந்த அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

அகமதுபின் அலி அரங்கம்

தோஹாவின் மேற்கு மையப் பகுதியான அல் ராயனில் உள்ள இந்த அரங்கில் 40000 ரசிகர்கள் கால்பந்து விளையாட்டைப் பார்த்து ரசிக்கலாம். பாலைவனத்தை ஒட்டிய பகுதி. இங்கு ஏற்கனவே இருந்த அரங்கத்தை இடித்துவிட்டுதான் புதிய அரங்கத்தை கட்டினர். புதிய அரங்கத்தின் எண்பது சதவீதம் கட்டுமான பொருட்கள் பழைய அரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

அல் ஜனாப் அரங்கம்

ல் வாக்ரா பகுதியில் அமைந்துள்ள இந்த அரங்கில் நாற்பதாயிரம் இருக்கைகள் உள்ளன. கடற்கரையை ஒட்டியுள்ள இந்த அரங்கம் கத்தாரின் பாரம்பரிய தோவ் படகுகளை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. உலக கோப்பைக்கு பிறகு மற்ற விளையாட்டு education களுக்கும் பயன்படும் வகையில் இந்த அரங்கம் மாற்றப்பட்டு உள்ளது.

அல்துமாமா அரங்கம்

ரேபிய சிறுவர்கள் அணியும் வெள்ளை நிற சல்லைட குல்லா போன்று இந்த அரங்கத்தை வடிவமைத்து இருக்கின்றனர்.

எஜுகேஷன் சிட்டி அரங்கம்

மொத்தம் நாற்பதாயிரம் ரசிகர்கள் போட்டியை காணும் வசதியுள்ள இந்த அரங்கம் கத்தாரின் கல்வி நகரமான அல் ரஷ்யாவில் கட்டப்பட்டுள்ளது. இஸ்லாமிய கட்டிடக் கலையின் சிறப்பை எடுத்துக் காட்டும் வகையில் உலகத் தரத்திலான வசதிகளுடன் இந்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

கலீஃபா சர்வதேச அரங்கம்

ந்த அரங்கிலும் நாற்பதாயிரம் ரசிகர்களுக்குத்தான் இடம். இது புதுப்பிக்கப்பட்ட அரங்கம். இந்த அரங்கம் 1976 முதல் பயன்பாட்டில் இருக்கிறது. கத்தாரின் முக்கிய கால்பந்து, தடகள போட்டிகள் இங்குதான் நடந்துள்ளன. அரங்கம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி கொண்டது.

அரங்கம் 974

ராஸ் அடுபு அபவுத் என்ற இடத்தில் உள்ள இந்த அரங்கத்தின் கொள்ளளவும் நாற்பதாயிரம் இருக்கைககள் தான். கடற்கரைக்கு மிக அருகில் உள்ள இந்த அரங்கம் உலக கோப்பைக்கு முன்பே மிகவும் பிரபலமான அரங்கமாகிவிட்டது. காரணம் இந்தப் புதிய அரங்கம் முழுவதும் கப்பலில் பொருட்களை கொண்டு செல்ல பயன்படும் இரும்பு கண்டெய்னர் எஃகினால் கட்டப்பட்டுள்ளது. 974 என்ற எண் கத்தாருக்கான சர்வதேச தொலைத் தொடர்பு குறியீடு எண். இந்த மைதானம் போட்டி முடிவுற்றதும் கலைக்கப்பட்டு அதன் பாகங்கள் அதாவது கண்டெய்னர்கள் இதுபோன்ற உள் கட்டமைப்பு தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com