குழந்தைகள் பணம் காய்க்கும் மரங்களா?

குழந்தைகள் பணம் காய்க்கும் மரங்களா?

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் குடிசைத்தொழிலாக உள்ளது வெள்ளித்தொழில். சிறப்பு வாய்ந்த கொலுசுகளின் உற்பத்தியில் இந்தியாவிலேயே முதலிடம் பெறுகிறது சேலம். இங்கு உற்பத்தியாகும் வெள்ளிக் கொலுசுகள் உலகளவில் பிரபலமானவை. இதை அனைவரும் அறிவோம். ஆனால், விசயம் இதுவல்ல. அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அனைவரின் பரிதாபத்தையும் சுமக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு பதிவுதான் இது.

சேலம் வெள்ளி கொலுசுப் பட்டறைகளில் ஆய்வு. இரண்டு குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு.

து செய்தி. எப்படித்தான் தடைகள் போட்டாலும் ஆங்காங்கு குழந்தைகளைப் பணிக்கு அமர்த்துவது இன்னும் குறையவில்லை என்பதுதான் வேதனை.

சிவதாபுரம், செலத்தாம்பட்டி, சீலநாயக்கன் பட்டி, மெய்யனூர், திருவாக்கவுண்டனூர், மணியனூர், செவ்வாய்பேட்டை, இரும்பாலை, தாரமங்கலம் என சேலம் சுற்றி உள்ள பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான வெள்ளிப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. இது பல இலட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக அமைகிறது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், இங்கு பணியில் அமர்த்தப்படுபவர்கள் பதினெட்டு வயதுக்கு மேல் உள்ளவர்களா என்றால் அதுதான் இல்லை. குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் குழந்தைகள் மற்றும் வளரிளம்பருவத்தில் உள்ளவர்களைப் பணியில் அமர்த்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறினால் அந்தப் பட்டறை முதலாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளும் அபராதங்களும் குறைந்தபட்சத் தண்டனையாக
6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும் அல்லது 20,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை அபராதம் போன்றவைகள் விதிக்கப்படுகிறது. ஆனால், அவற்றைக் கண்டுகொள்ளாமல் திரும்பத்திரும்ப குழந்தைத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவது முறையற்ற செயல் என்று பல சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தகுந்த கல்வி இல்லாததாலும் வறுமை காரணமாகவும் பரம்பரைத் தொழில் எனவும் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பணிக்கு அனுப்புவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தயவுசெய்து, குழந்தைகளைக் குழந்தைகளாக வாழவைக்க பெற்றோர்களும், தகுந்த வயது வராமல் பணிக்கு எடுக்க மாட்டோம் என்ற உறுதியுடன் பட்டறை முதலாளிகளும் முன்வரவேண்டும். அனைவருக்கும் கல்வி திட்டத்தின்படி நம் நாட்டின் அனைத்துப் பகுதிகளில் உள்ள குழந்தைகளும் கல்வி   பயில்கிறார்களா என்பதை அதிகாரிகள் கவனித்து ஆலோசனைகள் தரும் பட்சத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் குறையும் வாய்ப்பு உண்டு என்பது மக்களின் வேண்டுகோள். நம்பிக்கையும்கூட!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com