10% இட ஒதுக்கீடு நியாயமானதா?

reservation
reservation

- சுகுமாரன் கந்தசுவாமி

கல்வி, வேலை வாய்ப்பு, அரசு உதவிகள் போன்ற எல்லாவற்றுக்கும், எங்கள் பிரிவினருக்கும், ஒதுக்கீடு வேண்டும், வேண்டும் என இன்றும் பலகுரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

பலவகைகளில் சதவீதம், சதவீதமாக ஒதுக்கீடு வழங்கப் பட்டிருந்தாலும், அது கிடைக்கப் பெறாதவர்கள், எங்களையும் பிற்பட்ட, மிகப் பிற்பட்ட இனத்தில் சேர்க்க வேண்டுமென, ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைக்கிறார்கள். ஏனென்றால் சலுகைகளும், ஒதுக்கீடும் பிற்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கே போய்ச் சேருகிறது என்பது பரவலான கருத்து.

அன்றையக் காலகட்டத்தில் பிற்பட்ட ஜாதியினர் முன்னேற வேண்டும் என்பதற்காக, இந்த ஒதுக்கீடு முறை அமல் படுத்தப்பட்டு, இன்றுவரை, பிற்பட்ட வகுப்பினர், கோடிக்கணக்கான பேர், பலனடைந்து, முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள்.

resevation
resevation

ஆனால் மகாத்மா காந்தி அவர்கள் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை மட்டுமே இந்த ஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டு, அதற்குள் எல்லோரையும் முன்னேறச் செய்ய வேண்டும் என்றே விரும்பினார்.

இன்றோ அரசியல்வாதிகள் தங்களது ஓட்டு வங்கியை நிரப்பிக் கொள்வதற்காக, இந்த ஒதுக்கீடு கொள்கைகளை, தொடர்ந்து கையிலெடுத்துக் கொண்டு வருக்கிறார்கள்.

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தப் பிரிவினரை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து, சலுகைகளைப் பெற்றுத்தருவோம்' என மேடை தோறும் முழங்கி, ஓட்டைப்பெற முயற்சிக்கின்றனர்.

நாம் பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கு எதிரானவர் அல்ல.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

நிகழ்காலத்தில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள், உயர் பதவிகளில் இல்லையா? பொருளாதாரத்தில் மேம்படவில்லையா?

பொருளாதாரத்தில் பின் தங்கிய, வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மக்களால், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், உரிய முன்னேற்றத்தை அடைவதென்பது குதிரைக் கொம்புதான். இதில் ஒன்றோ, இரண்டோதான் விதிவிலக்கு. இதில் முற்பட்ட ஜாதியினரும் அடக்கம்.

இதற்காகத்தான் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு கருத்தைத் தெரிவித்தார். பிற்பட்டோர், மிகமிக பிற்படுத்தப்பட்டோர் என்பதனை, வருமானத்தின் அடிப்படையில்தான் நிர்ணயிக்க வேண்டும், என்று கூறினார். அன்று நிறைய எதிர்ப்புகள் கிளம்பியதால், அவரின் கருத்து எடுபடாமல் போனது.

இப்போது உச்சநீதிமன்றம், வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு பத்து சதவீத ஒதுக்கீடு தரவேண்டும் என, ஐந்து பேர் கொண்ட பெஞ்ச் தீர்பளித்திருக்கிறது.

இந்தத்தீர்ப்பில், முந்தைய ஒதுக்கீடுகள் குறைக்கவேண்டும் என்றோ அல்லது மாற்றி அமைக்க வேண்டும் என்றோ கூறவில்லை. வருமானத்தில் பின்தங்கியவர்களுக்கும், முன்னேற வாய்ப்பளிக்க வேண்டுமென்பதே, இத்தீர்ப்பின் நோக்கம்.

இதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இந்தத் தீர்ப்பு பல பேரின் வாழ்வில் விளக்கேற்றும். இதைப் பற்றி விமர்சிப்பதோ அல்லது எதிர்ப்பதோ அரசியல் செய்யும் நோக்கமாகத்தானிருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com