மெட்ராஸ் முதலைப் பண்ணையும் அழகிய சிற்றூராம் வடநெம்மேலியும்...

முதலைப் பண்ணை
முதலைப் பண்ணை

வகுப்பறைக்குள் நுழையும் ஆசிரியரைப் பார்த்ததும் மாணவர்கள் அனைவரும் 'கப்சிப்' என அமைதியாகின்றனர்.

"டியர் ஸ்டுடெண்ட்ஸ், இனைக்கு உங்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்ல போறேன், அது என்னதுனு யாருக்காவது யூகிக்க முடியுதா? ஓகே நானே சொல்லிடுறேன் நாம எல்லோரும் நாளைக்கு சுற்றுலா போகப்போறோம். எங்கேன்னு தெரியுமா?"

"எங்கே டீச்சர் கூட்டிட்டு போறீங்க? எங்களுக்கு கொஞ்சம் சொல்லுங்க டீச்சர். நாங்களும் அதை பற்றி தெரிஞ்சிக்கிறோம்."

"ஓகே பசங்களா, நம்ம பள்ளியில் இருந்து எல்லோரும் சேர்ந்து மெட்ராஸ் முதலைப் பண்ணைக்கு தான் போறோம்."

"முதலை பண்ணைக்கா டீச்சர்? ஐ ஜாலி நாங்க இதுவரை அந்தமாதிரி இடத்துக்கு போனதே இல்ல டீச்சர். முதலை பண்ணை எந்த இடத்துல இருக்கு?

"அது ஒரு அழகான எழில் கொஞ்சும் கிராமம். அந்த கிராமத்திற்கு பெயர் வடநெம்மேலி. மாமல்லபுரத்திற்கு அருகே இருக்கு. 1976 ல் ஊர்வன உயிரினங்களை காக்கும் நோக்கத்தில் இந்த சிறிய கிராமத்தில் தான் முதலை பண்ணைத் தொடங்கப்பட்டது."

"இங்கு வெறும் முதலைகள் மட்டும்தான் உள்ளதா டீச்சர்?"

"இல்ல இல்ல, இந்த இடம் முதலை, பாம்பு போன்ற 45 வகை ஊர்வன உயிரினங்களுக்கு உறைவிடமாய் அமைந்துள்ளது."

"45 வகை ஊர்வன உயிரனங்களா டீச்சர்!"

"ஆமாம், அது மட்டுமல்ல நம் இந்திய தேசத்தில் இயங்கிவரும் வன உயிரின பூங்காக்களில் நம்ம மெட்ராஸ் முதலைப் பண்ணை ஓர் முக்கிய இடத்தை பிடித்துள்ளது."

" இது பற்றி இன்னும் விவரமா சொல்லுங்களேன் டீச்சர்."

 "இவங்க மாசு கட்டுப்பாட்டிற்காக பெரும் முயற்சி எடுத்து வராங்க ஆரம்ப காலத்தில் எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் தான் இருந்தது. ஆனால், இப்போ அந்த முதலை பண்ணை அருகில் நிறைய மாட மாளிகைகளும் கடைகளும் உருவானதால் அதிக ஒலி மாசு ஏற்படுகிறது. அது மட்டும் இல்லை தீபாவளி போன்று ஏதாவது பண்டிகை காலம் வந்தால் இன்னும் அதிக ஒலி மாசு ஏற்படுகிறது. அதனால ஊர்வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுது இதை பற்றி நாளைக்கு இன்னும் நிறைய தெரிஞ்சுக்கலாம்."

முதலைப் பண்ணை
முதலைப் பண்ணை

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற மொழிக்கேற்ப சுமார் 45 ஆண்டுகளாக ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறது வடநெம்மேலியும் முதலை பண்ணையும். இந்நட்பின் பயனாக இவர்கள் அடைந்த பரஸ்பர நன்மைகள் அவற்றுள் ஒன்றுதான் கிராம சுற்றுச்சூழல் பாதுகாப்பு

கிராம சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஓர் அங்கமாக ஒலி மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்கு வடநெம்மேலி ஆதரவு தெரிவித்துள்ளது. வடநெம்மேலி பஞ்சாயத்து தலைவர் திரு பொன்னுரங்கம் அவர்களின் சீரிய முயற்சியால் ஊரில் அமைந்துள்ள முக்கிய சந்திப்புகளில் ஒலி மாசு கட்டுப்பாடு அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இச்செயல் வெற்றியின் முதல் படியாக கருதப்படுகிறது.

கிராம சுற்றுச்சூழல் பாதுகாப்பு விரிவுபடுத்தும் நோக்கத்துடன், கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உல்லாச விடுதிகளுக்கு ஒலி மாசு கட்டுப்பாடு மற்றும் அதன் விளைவுகளை விளக்கி அதற்கு ஆதரவு தேடி வருகிறது. காலத்தின் கட்டாயத்தை உணர்ந்த சில உல்லாச விடுதிகள் இதை மனமார வரவேற்கிறார்கள். இத்திட்டத்தினை வலுப்படுத்த இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் (ஐ.ஐ.டி, மெட்ராஸ்) உடன் இணைந்து ஒலி மாசினால் ஊர்வன உயிர்களுக்கு ஏற்படும் உபாதைகளை பட்டியலிட்டு உலகறிய செய்துள்ளது.

இவர்களது ஆய்வின்படி மனிதனால் உண்டாக்கப்படும் ஒலியானது (அதாவது வாகன இரைச்சல், ஒலிபெருக்கியில் இருந்து உண்டாகும். சப்தங்கள், விழாக்காலங்களில் நிகழும் வெடிச்சப்தங்கள் போன்றவை எல்லாம் இதில் அடங்கும்) மனிதர்களை மட்டுமல்லாது வடநெம்மேலியின் பொக்கிஷமான மெட்ராஸ் முதலைப் பண்ணை வாழ் ஊர்வன உயிரினங்களை வெகுவாக பாதிக்கிறது என்பதனை மெய்ப்பித்துள்ளார்கள் இந்த அறிவிப்பினால் இந்திய வனவிலங்கு மேலாண்மைக்கு மேலும் வலுப்பெறும் என்பதில் ஐயமில்லை.

இது ஒருபுறமிருக்க கழிவு மேலாண்மையின் அவசியத்தை நாடெங்கும் உணர்த்தி வருகிறது. குறிப்பாக நெகிழி (அதாவது பிளாஸ்டிக் பொருட்கள்) பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்குமாறு தனது விழிப்புணர்வு பிரச்சாரங்களை திட்டமிட்டு அமைத்து வருகிறது நம் மெட்ராஸ் முதலை பண்ணை. பண்டிகை நாட்களுக்கு பிறகு கிராம மக்களுடன் சேர்ந்து ஊரை தூய்மைப்படுத்தும் பணிகளுக்காக மெட்ராஸ் முதலைப் பண்ணை தயாராகிவருகிறது புது முயற்சியாக கடல் அரிப்பிபினை தடுக்க கடற்கரை மேலாண்மை திட்டங்களை முன்னெடுக்க முயற்சித்து வருகிறார்கள்.

ஊர் கூடி தான் தேர் இழுக்க முடியும் என்ற கூற்றின் படி நாம் அனைவரும் வடநெம்மேளி முதலைப் பண்ணை போல ஒன்றிணைந்து வாழ்விடங்களை மாசில்லா வாழ்விடமாக மாற்றி இயற்கையையும் சுற்றுச் சூழலையும் பாதுகாப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com