உலகெங்கும் விதம்விதமான புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

உலகெங்கும் விதம்விதமான புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அவற்றில் சில:

தாய்லாந்து - புத்தாண்டு அன்று தாய்லாந்தில் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக் கொள்வார்கள்.

ரஷ்யா - ரஷ்யாவில் ஜனவரி 1 , 14 என இரண்டு நாள்கள் புத்தாண்டைக் கொண்டாடுகின்றனர். பண்டைய ஜூலியன் காலண்டர்படி ஜனவரி 14-ம்,  கிரிகோரியன் காலண்டர்படி ஜனவரி 1 ம் கொண்டாடப் படுகிறது.

தென் ஆப்ரிக்கா - புத்தாண்டு அன்று தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரின் சில பகுதிகளில் பழைய பொருட்களைச் சேகரிப்பார்கள். பின்னர் அவற்றைக் கட்டிடங்களின் மாடிக்குக் கொண்டு சென்று அங்கிருந்து தெருவில் கொட்டுவார்கள்.

எத்தியோப்பியா - இந்த நாட்டுக்கு மொத்தம் 13 மாதங்கள். அதனால், அவர்கள் தற்போது 2009-ம் ஆண்டில்தான் இருக்கிறார்கள். நாள் கணக்கின்படி அவர்களுக்கு செப்டம்பர் 11-ம் தேதிதான் புத்தாண்டு பிறக்கிறது.

தென் கொரியா - இந்நாட்டில். புத்தாண்டு அன்று ஒரு வயதைக் கூட்டிக் கொள்கின்றனர்.

சிங்கப்பூர் - புத்தாண்டு தினத்தன்று சிங்கப்பூர் நகரமே மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணக் கோலம் பூண்டு ஒரு கற்பனை உலகில் மிதப்பதைப் போலிருக்கும். கடைகளில் பல பரிசுப் பொருட்கள் காணப்பட்டாலும் நிச்சயமாக ப்ளம் பழமரம் ஒன்று இருக்கும்.

ஸ்பெய்ன் - இவர்கள் புதுவருடத்தன்று 12 திராட்சை பழங்களை தின்பார்கள். அப்படி செய்தால் அந்த வருடத்தின் 12 மாதங்களும் மிகவும் இனிப்பாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

கிரீஸ் - டிசம்பர் 31ம் தேதி இரவே வெங்காயத்தை இவர்கள் தோரணமாக கட்டி வைப்பர். மறுநாள் காலையில் அந்த வெங்காயத்தால் தலையில் தட்டி குழந்தைகளை எழுப்புவார்களாம்.

ஜெர்மனி - பன்றி வடிவில் இனிப்பு செய்து சாப்பி டுவதுடன் அன்று எல்லாச்சேனல்களிலும் DINNER FOR ONE என்ற 1920ம் ஆண்டு எடுத்த நகைச்சுவை படத்தை மட்டுமே ஒளிபரப்புவார்களாம். அதைக் கண்டு மகிழ்வார்களாம்.

பிரேசில் - புத்தாண்டு தினத்தன்று இவர்கள் ஒரு படகில் அத்தர் போன்ற வாசனை திரவியங்கள் ஆடைகள் நகைகள் வைத்து அதற்கு பூஜை செய்து, அதனை நடுக்கடலில் கொண்டு விட்டு விட்டு வருவார்கள்.

ஜப்பான் - புத்தாண்டு தினத்தன்று இங்குள்ள பௌத்த கோயில்களுக்குச் சென்று அங்கே உள்ள மணியை 108 முறை அடிப்பார்களாம்.

ஈக்வடார் - இந்த நாட்டு மக்கள் புத்தாண்டு தினத்தன்று காகிதத்தால் நிரப்பப்பட்ட பொம்மைகளை எரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

டென்மார்க் - இங்கு புத்தாண்டு அன்று, ஆண்டு முழுவதும் சேமிக்கப்பட்ட பயன்படுத்தப்படாத தட்டுகளை, தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டு வாசலில் போட்டு உடைத்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பார்கள்.

கொலம்பியா - இந்நாட்டில் புத்தாண்டு தினத்தன்று வீட்டின் வாசலில் வெற்று சூட்கேஸ்களை வைக்கிறார்கள்.

பிலிப்பைன்ஸ் - இங்கு புத்தாண்டு பிறக்கும் நேரமான 12 மணி ஆகும்போது சரியாக 12 பழங்களைக் சாப்பிடு கிறார்கள்.

சிலி - சிலி நாட்டை சேர்ந்த மக்கள் புத்தாண்டு அன்று அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு ஸ்பூன் பருப்பை சாப்பிடுகிறார்கள்.

பொலிவியா - பொலிவிய மக்கள் புத்தாண்டு அன்று நாணயங்களை கேக்குகளுக்குள் வைத்து சமைக் கிறார்கள். இப்போது யார் இந்த நாணயங்களை தங்கள் துண்டுகளில் கண்டாலும் அவர்கள் அடுத்த ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள் என்று நம்புகிறார்கள்.

அயர்லாந்தில் திருமணம் ஆகாத பெண்கள் புத்தாண்டு அன்று இரவு தூங்கும்போது தலையணைக்கு அடியில் மைல்கற்களை வைத்துக்கொண்டு தூங்குவார்கள். இவ்வாறு செய்தால் அவர்களுக்கு அடுத்த ஆண்டில் திருமணம் நடக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com