புகைப்படக் கருவி மூலம், பணம் ஈட்டுவது எப்படி?

புகைப்படக் கருவி மூலம், பணம் ஈட்டுவது எப்படி?

ங்களிடம் நல்லதொரு புகைப்படக் கருவி இருக்கிறது என்றால், நீங்கள் பின்வரும் வழிகளில் பணம் சம்பாதிக்கலாம்.

1.   ஒரு புகைப்படக் கடை தொடங்கி, கடவுச்சீட்டு புகைப்படம் முதல், தனிப்பட்ட, குடும்பம் புகைப்படங்கள் வரை பல்வேறு தோற்றுருவ (profile) புகைப்படங்களை எடுத்து, பணம் ஈட்டலாம்.

2.   திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம் போன்ற விழாக்களுக்கு புகைப்படம் எடுக்கலாம்.

3.   திருமணத்திற்கு முன்பான(pre-wedding), திருமணத்திற்கு பிறகான (post-wedding) புகைப்பட எடுக்கும் நிகழ்வுகளைச் செய்யலாம்.

4.   விதவிதமான கருத்துருக்களில் ப்ரத்யேக புகைப்படங்களை எடுத்து (stock photos), Shutter stock போன்ற இணையதளங்களில் விற்கலாம்.

5.   செய்தி நிறுவனங்கள், செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் போன்றவற்றிற்கு புகைப்படக் கலைஞராக பணியாற்றலாம்.

6.   Flickr போன்ற இணையதளங்கில் நேரடியாக புகைப்படங்களை பதிவேற்றி, அதனை விற்று பணம் ஈட்டலாம்.

7.   பொருட்களின் விளம்பரங்களுக்கு புகைப்படம் எடுக்கலாம்.

8.   புகைப்படங்கள் எடுக்கும் வித்தையை காணொலிகளாக யூ டியூபில் பதிவேற்றலாம்

9.   புகைப்படங்கள் எடுக்கும் கலையை ஒரு வகுப்பாக நடத்தலாம்.

10.  புகைப்படங்கள் எடுக்கும் கலையைக் குறித்து, புத்தகம் எழுதலாம்.

11.  ஊரின் பிரபல சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று புகைப்படம் எடுத்து, பணம் ஈட்டலாம்.

12.  சுற்றுலா தலங்களுக்குச் சென்று, புகைப்படங்கள் எடுத்து, பயணக் கட்டுரைகள் எழுதித் தரலாம்.

13.  இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்களில் புகைப்படம் பதிவேற்றலாம்.

14.  வளர்ந்து வரும் கலைஞர்களை புகைப்படம் எடுத்து தரலாம்

15.  புகைப்படம் சார்ந்த அருங்காட்சியகங்களுக்கு புகைப்படங்களை விற்று பணம் ஈட்டலாம்.

16.  சிறிய மலர்கள், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றை புகைப்படம் எடுத்து (macro photography), ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு சமர்ப்பிக்கலாம்.

17.  இப்போது பல்வேறு புகைப்படக் கருவிகளில், காணொளி எடுக்க முடியும். அதன் மூலம் குறும்படங்களுக்கு பணியாற்றலாம்.

18.  சுற்றுலா நிறுவனத்தில் புகைப்பட நிபுணராக இருந்து, அங்கு வருபவர்களைப் புகைப்படம் எடுத்து, பணம் ஈட்டலாம்.

19.  புகைப்படங்களை எடுத்து, அதனை காபி கோப்பை, டி சட்டை, போன்றவற்றில் அச்சிட்டு, விற்கலாம்.

20.  வீடுகளை வாடகைக்கு விடுபவர், வீடுகளை விற்பவர்கள் போன்றவர்களுக்கு புகைப்படம் எடுத்து தரலாம்.

21.  புகைப்படத்தை எவ்வாறு எடுத்து, மேம்படுத்துவது என்பது குறித்த மென்பொருட்களை கற்று, அவற்றைக் குறித்த வகுப்புகள் எடுக்கலாம்.

22.  புகைப்படம் சார்ந்த போட்டிகள் பங்கு பெற்று, அதன் மூலம் பணம் ஈட்டலாம்.

23.  பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு, பொருட்களைப் புகைப்படம் எடுத்து, பணம் ஈட்டலாம்.

24.  கோயில்கள், வரலாற்று இடங்கள் போன்றவற்றை புகைப்படம் எடுத்து ஒருசேரப் புத்தகமாக போடலாம்.

25.  திரைப்படங்கள் , நாடகங்கள் போன்றவற்றின் விளம்பரப் பலகைக்கு புகைப்படம் எடுக்கலாம்.

26.  பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களுக்குச் சென்று குழு புகைப்படம் (group photo) எடுத்து பணம் ஈட்டலாம்.

27.  பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில், அடையாள அட்டை (identity card) புகைப்படம் எடுத்து பணம் ஈட்டலாம்.

28.  தனியான ஒரு வலைப்பக்கம் துவங்கி, அதில் உங்களது புகைப்படங்களைப் பதிவேற்றி, அது சம்பந்தமாக எழுதி, வருமானம் ஈட்டலாம்.

29.  தனியாக புகைப்படம் எடுக்கும் தன்னுரிமைத் தொழிலராக (freelancer) இணையத்தில் பதிவு செய்து, அதன் மூலம் புகைப்படங்கள் எடுக்கும் வாய்ப்புகளைப் பெறலாம்.

30.  பெரிய தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி, அங்கு நடக்கும் விழாக்களுக்கு புகைப்படம் எடுத்து, தரலாம்.

இன்னும் பல்வேறு வழிகள் உள்ளன. புகைப்படக் கருவி என்ற அருமையான விஷயத்தைக்கொண்டு நீங்கள் பல்வேறு வழிகளில் பணம் ஈட்டலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com