
கொல்கத்தாவிலுள்ள கர்தா பகுதியைச் சேர்ந்த 60 வயதான ஷிவானி என்பவர் ஷாருக்கானின் தீவிர ரசிகை. கடந்த சில ஆண்டு காலமாக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் இவருக்கு ஷாருக்கானை ஒருமுறையாவது நேரில் சந்தித்துவிட ஆசை. இதையறிந்த ஷாருக்கான், வீடியோகால் செய்து அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகினறன.
வீடியோ கால் மூலம் சுமார் 40 நிமிடங்கள் ஷிவானியுடன் பேசிய ஷாருக்கான் அவரது மருத்துவச்செலவை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார். மேலும், ஷிவானியின் மகள் பிரியா கூறியதாவது “என் தாயார் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக ஷாருக்கான் தெரிவித்தார். என்னுடைய திருமணத்திற்கு வருவதாகவும், கொல்கத்தாவிலுள்ள எங்கள் வீட்டிற்கும் நேரில் வருவதாகவும் கூறினார். அப்படி வருகையில், முள் இல்லாத மீன் குழம்பை சமைத்து தர வேண்டுமெனவும் அன்போடு தெரிவித்தார்.
படப்பிடிப்பில் பிசியாக இருந்தபோதும், ஷாருக்கான் தனது ரசிகைக்காக வீடியோகாலில் பேசியது: மருத்துவ உதவி அளிப்பதாகக் கூறியது குறித்த செய்தி அறிந்த நெட்டிசன்கள் அவரைப் பாராட்டியுள்ளனர்.
கேதார்நாத்தில் அக் ஷய் குமார்!
சமீபத்தில் பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார் கருப்பு உடையணிந்து, விரதமிருந்து கேதார்நாத் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.
காரணம்...? கடந்த இரண்டு ஆண்டுகளாக அக் ஷய் குமார் நடித்த படங்கள் தொடர் தோல்வியைச் சந்தித்து வருகிறது. 2022ஆம் ஆண்டு வெளியான படங்கள் மற்றும் செல்ஃபி உட்பட பல படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. “ரசிகர்களின் ரசனை மாறிவிட்டதற்கு ஏற்ப நான் மாற வேண்டும்” என்று தன் தோல்விகளுக்கு பொறுப்பு ஏற்று அறிக்கை வெளியிட்டுள்ளார் அக் ஷய் குமார்.
‘சூரரைப் போற்று (இந்தி ரீமேக்), ஓஎம்ஜி 2, தி.கிரேட் இண்டியன் ரெஸ்க்யூ மற்றும் சத்ரபதி சிவாஜி வாழ்க்கை வரலாறு படங்களில் இப்போது நடித்து வருகிறார்.
கேதார்நாத் கோயில் பயணத்தை ரகசியமாக, பிறருக்குத் தெரியாமல் மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது.
(“நம்பிக்கை நல்லதே செய்யும்!)
குழந்தை பெறும் ஐடியா இப்போது நோ!
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், மூன்று வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் விக்கி கெளஷலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தான் கோட்டையில் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது.
கத்ரீனா கைஃப் சில வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் சல்மான்கானை காதலித்த பிறகு, ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி அதை ப்ரேக் செய்தார். பின்னர் ரன்பீர் கபூரை காதலித்ததாக தகவல் வெளியானது.
தற்சமயம், அலியாபட், பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து “ஜீ வி ஸரா” மற்றும் விஜய்சேதுபதியுடன் சேர்ந்து, “மேரி கிறிஸ்மஸ்” படத்திலும் நடித்து வருகிறார். சல்மான்கானுடன், கத்ரீனா கைஃப் நடித்துள்ள “டைகர் 3” படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
இவர் அணியும் ஆடைகளைப் பார்த்து, கர்ப்பமாக இருப்பதாக செய்தி பரவ, கத்ரீனா கைஃப், தனது தோழிகளிடம் கூறியதாவது: “தற்போது குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை. நடிக்க ஒப்புக்கொண்ட படங்களை முடித்து கொடுத்த பின்தான் அதுகுறித்து யோசிக்க வேண்டும்” என்பதாகும்.
(அவரவர் செளகரியம்!)