சோம்பல் தீர்க்கும் சோம்பு

சோம்பல் தீர்க்கும் சோம்பு

* தினசரி உணவில் சோம்பு சேர்ப்பதால், குடற்புண்கள் ஆறும்.

* நீரிழிவு நோய் உள்ளவர்கள் சோம்பை கொதிக்க வைத்து குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவில் பராமரிக்கும்.

* தினமும் சோம்பு கசாயம் குடித்து வந்தால், வறட்டு இருமல், மூக்கில் நீர் வடிதல் ஆகியன குணமாகும்.

* குழந்தைகள் வயிற்று வலியால் துடித்தால், உடனே சோம்பு கொடுங்கள். இதனால் வயிறு களிமண் போல் கனமாக இருந்தாலோ, வயிற்று வலி இருந்தாலோ, வலி உடனடியாக சரியாகும்.

* ஒரு சிலருக்கு வேலைப்பளு, மனஅழுத்தம் மற்றும் உடல் நல பிரச்சனைகள் காரணமாக சரியாக தூக்கம் வராது. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு தினமும் சோம்பு சேர்த்த உணவுகளை உணவில் சேர்த்து வந்தால் அதில் உள்ள மெக்னீசியம் சத்து நரம்புகளுக்கு வலிமையளித்து ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவுகிறது.

* சோம்பு தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை கழிவுகள் மூலம் வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

* சோம்பைப் பொடி செய்து, தேனுடன் கலந்து (1கிராம்) சாப்பிட்டால் பெண்ணுக்கு கருப்பை பலப்படும். கல்லீரலுக்கு பலம் கிடைக்கும்.

* தாய்பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்கள் சோம்பை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இதிலுள்ள “அனீதோல்” எனப்படும் வேதிப்பொருள், பெண்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை தூண்டி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.

* சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும். வயிற்றை சுற்றியுள்ள தேவையற்ற சதைப் பகுதி கரையும்.

* கண்கள் மங்கலாகத் தெரிவது, தூரப் பார்வை, கிட்டப் பார்வை போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், சோம்பை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

* சோம்பை இளம் வறுவலாக வறுத்துப் பொடி செய்து, தினமும் இரு வேளை பனங்கற்கண்டுடன் சேர்த்து 1கிராம் சாப்பிட்டு வந்தால், மாதவிலக்கினால் ஏற்படும் வயிற்றுவலி குணமாகும்.

* உடல் சூட்டைத் தணிக்க வெறும் வாயில் சோம்பை மென்று தின்றால், உடல் சூடு தணியும்.

* டீ, காஃபிக்கு சோம்பு டீ நல்ல மாற்றாக இருக்கும். இதை அருந்துவதால் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

- ஆர். பத்மப்ரியா,

ஸ்ரீரங்கம் 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com